100+ விடுதிகள் மூடல்.. சமூக நீதி பேசி ஏமாற்றாமல் CM ஸ்டாலின் இதில் ஆர்வம் காட்ட வேண்டும்.. அண்ணாமலை விளாசல்!

FotoJet 21 1

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சிஅளிக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்..


தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் “ ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இருந்த 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 மாணவர் விடுதிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. 100 க்கும் அதிகமான விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

சுமார் 98,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த விடுதிகளில், தற்போது, 65,000 மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. சுத்தமான அறைகள், சுகாதாரமான குடிநீர், தரமான உணவு என்ற அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்கப்படாததால், மாணவர்கள், இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் காட்டுவதில்லை. குறிப்பாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருப்பதால், அது வீணாகி, கால்நடைகளுக்கு உணவாக விற்கப்படுவதை, ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம்.

பட்டியல் சமூக மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க வேண்டும் என இந்த மாணவர் விடுதிகள் அமைக்கப்பட்ட நோக்கத்தையே, திமுக அரசு சிதைத்து விட்டது. பட்டியல், பழங்குடி சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

அந்த நிதியை, இந்த விடுதிகளை மேம்படுத்தப் பயன்படுத்துவதிலிருந்து, திமுக அரசை எது தடுக்கிறது? இந்த அழகில், சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்தோம் என, இரண்டு நாட்கள் விளம்பர நாடகம் நடத்தி, தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள். உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மக்கள், மாணவர்கள் முன்னேற்றத்தில் முதலமைச்சர் காட்ட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம்! பாஜகவின் முக்கிய மூவ்..!

RUPA

Next Post

மீனுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால், அவ்வளவு தான்… இந்தப் பிரச்சனைகள் நிச்சயம் வரும்.!

Mon Dec 15 , 2025
பலருக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். மீன் குழம்பு அல்லது மீன் வறுவல் என தங்களுக்கு பிடித்த வகைகளில் மீனை சாப்பிடுகின்றனர்.. மீன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, ஆனால் அதை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். சில உணவுகளை மீனுடன் சேர்த்து சாப்பிட்டால், அது கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை உண்டாக்கும். இப்போது மீனுடன் சேர்த்து ஒருபோதும் சாப்பிடக்கூடாத 5 முக்கியமான […]
Fish 2025

You May Like