H3N2 வைரஸ் காரனமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததால், நாட்டில் பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது..
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. தற்போது இந்தியாவில், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 5 நோயாளிகளில் ஒருவர் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் H3N2 காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.. மகாராஷ்டிர மாநிலம் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் 73 வயது முதியவர் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. உயிரிழந்த முதியவர், இறந்தவர் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) மற்றும் இதய நோய் ஆகிய பாதிப்பு இருந்துள்ளது… இதன் மூலம் இந்தியாவில் H3N2 வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் முதன்முதலில் H3N2 காரணமாக கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் 82 வயது முதியவர் உயிரிழந்தார்.
நாட்டில் ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை 451 பேருக்கு H3N2 வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், மார்ச் மாத இறுதி முதல் பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது..
H3N2 என்றால் என்ன? H3N2 என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும், இது பொதுவாக பன்றிகளில் பரவுகிறது மற்றும் மனிதர்களை பாதிக்கிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது. இந்த வைரஸின் அறிகுறிகள் பருவகால காய்ச்சல் வைரஸ்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும், மேலும் காய்ச்சல் மற்றும் இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற சுவாச அறிகுறிகளும், உடல் வலி, குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிற அறிகுறிகளும் இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..