புரோட்டின் பவுடர்களை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதா.? அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன.?

இன்று உடற்பயிற்சிக்கு செல்லும் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது புரோட்டின் பவுடர்களாகும். இவற்றை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் அதிக அளவு புரதச்சத்தை பெற்று தசைகள் வலுப்பெறுவதோடு உறுதியான உடல் அமைப்பு மற்றும் தட்டையான வயிறு கிடைக்கும் என பெரும்பாலானவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். பால் மற்றும் சோயா ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் புரோட்டின் பவுடர்களில் அதிக அளவிலான புரதச்சத்துக்கள் இருக்கிறது. எனினும் புரோட்டின் பவுடரை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தீங்கு ஏற்படுமா என்ற சந்தேகமும் பலரிடம் பரவலாக இருக்கிறது. இதனைப் பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக காணலாம் .

இன்று சந்தைகளில் அதிகமாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் முதன்மையாக இருப்பது புரோட்டின் பவுடர். பால் மற்றும் சோயா ஆகியவற்றை பதப்படுத்தி இந்த புரோட்டின் பவுடர்கள் தயாரிக்கப்படுகின்றது. இவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து சரியான அளவில் கிடைக்கிறது. மேலும் இவையினும் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை தூண்டுகின்றன. இந்தப் ப்ரோட்டின் பவுடர்களில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் நிறைந்து இருக்கிறது. இவற்றால் நமது உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளும் கிடைக்கிறது.

எனினும் அளவுக்கு அதிகமான புரதச்சத்து உடலில் இருந்தால் குமட்டல், சோர்வு, தலைவலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் அதிகப்படியான புரோட்டின் பவுடரை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடலில் இருக்கும் நீர்ச்சத்து உறிஞ்சப்படுகிறது. இதன் காரணமாக சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுகிறது. புரோட்டின் பவுடர்களில் இருக்கும் சர்க்கரை மற்றும் எண்ணெய் சத்துக்கள் உடல் பருமன் பிரச்சனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. எனவே முறையான ஆலோசனையுடன் சரியான அளவில் புரோட்டின் பவுடர்களை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். அதேநேரம் தரமான புரோட்டின் பவுடர்களை பயன்படுத்துவதும் அவசியம் என தெரிவிக்கிறார்கள் நியூட்ரிஷியன் நிபுணர்கள்.

Next Post

பேச்சுலர் ஸ்பெஷல் பூண்டு மிளகு சாதம் எப்படி செய்யலாம்னு பாக்கலாமா.! சிம்பிளான ரெசிபி.!

Thu Dec 28 , 2023
பேச்சுலர்கள் எளிதாக சமைக்க கூடிய சிம்பிளான மற்றும் சத்துக்கள் நிறைந்த பூண்டு மிளகு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த சாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் ஊறுவதற்கும் உதவி புரிகிறது மேலும் வாயு தொல்லை மற்றும் அஜீரணம் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும். இந்த சாதம் செய்வதற்கு சட்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி என்னை நன்றாக சூடானதும் அரை அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் […]

You May Like