உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது? இது தமிழ்நாடா? உத்தரப்பிரதேசமா..? CM விஜய்யை விளாசிய உதயநிதி..!

cm vijay udhanidhi

தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. தினமும் சில கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் பதிவாகி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோவை சூலூரில் 10 சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..


அதே போல் திருவாரூரில் செய்தியாளர்கள் வீட்டில் புகுந்து தாக்குதல், கஞ்சா போதை கும்பல் தாக்குல், கொலை, என பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.. இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.

இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து விஜய் தலைமையிலான தவெக அரசை கடுமையாக சாடி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.

மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.

மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?

அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : மாணவர்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்..!

English Summary

Opposition Leader Udhayanidhi Stalin has severely criticized the Vijay-led TVK government over the rising crime rate in Tamil Nadu.

RUPA

Next Post

ஏசியை அடிக்கடி ஆன்-ஆஃப் செய்கிறீர்களா? மின்கட்டணம் குறையாது.. இரட்டிப்பாகும்.. எப்படி தெரியுமா..?

Mon May 25 , 2026
Turning AC on and off repeatedly can increase your electricity bill
split ac deals 1744004594102 1744004616136 1

You May Like