ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்.. 78 நாள் சம்பளம் போனஸ்! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

railwayemployeesbonus 1758707427 1

நாடு முழுவதும் ரயில்வேயில் பணியாற்றும் 11.4 லட்சம் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸாக அதிகபட்சம் ரூ.17,951 கிடைக்க உள்ளது. 2025-26ஆம் ஆண்டுக்கான உற்பத்தித் திறன் அடிப்படையிலான போனஸை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மொத்தம் ரூ.2,009.61 கோடி செலவிடப்பட உள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்துக்குச் சமமான தொகை போனஸாக வழங்கப்படும்.

இந்த அறிவிப்பால் ரயில்வேயின் பல்வேறு பணிப் பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பயனடைய உள்ளனர். ரயில் ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள், நிலைய மேலாளர்கள், தண்டவாளப் பராமரிப்புப் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், பாயின்ட்ஸ்மேன்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட குரூப் சி ஊழியர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ரயில்வே ஊழியர்களின் உழைப்பைப் பாராட்டவும், பணியில் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் பண்டிகைக் காலத்தில் இந்த போனஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக, துர்கா பூஜை மற்றும் தசரா பண்டிகைகளுக்கு முன்னதாக போனஸ் வழங்குவது வழக்கமாக உள்ளது.

சரக்குப் போக்குவரத்து மற்றும் பயணிகள் சேவையில் ரயில்வே துறை தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. 2025-26ஆம் ஆண்டில் 1,670 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டதுடன், சுமார் 741 கோடி பயணிகளுக்குப் போக்குவரத்து சேவையும் வழங்கியுள்ளது. இந்தச் செயல்பாடுகளில் ரயில்வே ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Also Read: அதிர்ச்சி!!! 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரோபோ..

Saranya

Next Post

“நைட் இதையா டி சமைப்ப?” ஆத்திரத்தில் மனைவியைக் கடித்து, கல்லால் தாக்கிய கணவர்!

Thu Oct 15 , 2026
உருளைக்கிழங்கு கறி சமைத்துக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியைக் கடித்தும் கல்லால் தலையில் தாக்கியும் படுகாயப்படுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த 40 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், சௌரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டோமாம்பூர் கிராமத்தில் அக்டோபர் 12ஆம் தேதி மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஓம் பிரகாஷ் விஸ்வகர்மா என்பவருக்கும் அவரது […]
f031675dcc1ec9f7a530bbe09e34341338b3ef491bdaa10d540d88eafb1e184d 1

You May Like