தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன..
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தனித்தனியே கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.. தவெகவின் நிர்வாகிகள் நேரடியாகவும் சென்று ஆதரவு கோரினர்.. இதுகுறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றன.. எனினும் எந்த முடிவு ஏற்படாமல் உள்ளது..
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் ” கட்சி தலைவராக முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இருக்கிறது.. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளை அறிய வேண்டியது தலைவராக எனது கடமை.. தற்போதைய அரசியல் சூழல் குறித்து இன்று மாலை ஆன்லைனில் ஆலோசனை செய்கிறோம்..
எங்கள் தோழர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல் நான் முடிவெடுக்க முடியாது. நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு என் முடிவை அறிவிக்கிறேன்.. எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் இன்னும் எடுக்கவே இல்லை.. நிலைப்பாட்டை எடுத்தபின் பேசுகிறோம்..
கடந்த 4-ம் தேதி தான் தேர்தல் முடிவு வெளியானது, முடிவெடுக்க தாமதம் என எப்படி கூற முடியும்..? தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது தொடர்பாக நாளை முடிவை அறிவிப்போம்.. விசிக உயர்நிலை கூட்டம் முடிந்த பின்னர் நாளை காலை முடிவை அறிவிப்போம்..” என்று தெரிவித்தார்..
Read More : “விஜய்யை நிறுத்த வாழ்நாள் எதிரிகள் ஒன்றிணைகிறார்கள்.. யார் துரோகி..? மாணிக்கம் தாகூர் சாடல்..



