எப்போதும் கோடை காலமான சித்திரை மாதத்தில் வெயில் அதிகரித்து காணப்படும். அந்த வகையில், பகல் சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் கூட மாலை சமயத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகின்றது.
இத்தகைய நிலையில், மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிறைவு பெறுவதால் இன்னும் 2 தினங்களுக்கு இடி மின்னலுடன் லேசானது அல்லது கனமழை தமிழகத்தில் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அந்த விதத்தில், மதுரையில் மூன்று மாவடி, ரிசர்வ் லைன், ஐயர் பங்களா, தல்லாகுளம் சின்ன சுக்கி குளம், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், குருவிக்காரன் சாலை, வீரகனூர் சாலை, வண்டியூர், அனுப்பானடி போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு சமயத்தில் பயங்கரமான இடி, மின்னல், காற்றுடன் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
காற்றுடன் கனமழை பெய்தால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அதோடு, காற்றும் பலமாக வீசியதால் பல்வேறு பகுதிகளில் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
2 தினங்களுக்கு முன்னர் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வேரோடும் மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில், தற்சமயம் பயங்கரமான இடி, மின்னலுடன் கனமழை பெய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.