ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான இளம் பெண் ஒருவரை அவருடைய காதலன் துண்டு, துண்டாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜஸ்தான் நாகவுரில் பலாசார் என்ற கிராமத்தைச் சார்ந்த இளம் பெண் குட்டி திருமணமான அந்த பெண் கடந்த மாதம் தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகை தந்தார்.மேலும் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி கணவருடைய வீட்டிற்கு செல்வதாக தன்னுடைய தாய் வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
ஆனால் அவருடைய கணவர் வீட்டுக்கு செல்லாமல் திடீரென்று அந்தப் பெண் மாயமானார். அவருடைய கைபேசியும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் கணவர் வீட்டில் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தை நாடினர்.
மேலும் இதுகுறித்து வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் ஜனவரி மாதம் 28ஆம் தேதி அதே ஊரில் உள்ள மால்வா ரோடு பகுதியில் காணாமல் போன பெண்ணின் உடைகள் தலைமுடி உடலின் சில பாகங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டனர்.
இதன் காரணமாக, அதிர்ச்சிக்குள்ளான காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தியது. அந்த விசாரணையில் தான் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியானது.அதாவது கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த அனுப்ராம் என்ற இளைஞருக்கும் இடையே ஏற்கனவே காதல் இருந்திருக்கிறது.
அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்ற பின்னரும் கூட அவர்களிடையிலான காதல் தொடர்ந்திருக்கிறது. அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய காதலனை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நடந்த தினத்தன்று கணவருடைய வீட்டிற்கு செல்வதாக தெரிவித்துவிட்டு அந்த இளம் பெண் தன்னுடைய காதலனை சந்திக்க சென்றிருக்கிறார்.
அப்போது அந்த இளம் பெண்ணுக்கு காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த பெண்ணை கொலை செய்த அனோப்ராம் அவருடைய உடல் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி கிணறு போன்ற பல்வேறு பகுதிகளில் வீசிவிட்டார் என்ற விவரம் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து கொலை செய்த அனோப்ராமை கைது செய்த காவல்துறையினர் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை மீட்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறார்கள்.
ஏற்கனவே டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் ஷரத்தா வாக்கர் தன்னுடைய காதலனால் கொலை செய்யப்பட்டு பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்டார். அதே சம்பவம் தற்போது பல பகுதிகளில் அடுத்தடுத்து நடந்து வருகின்றனர்