விவாகரத்து ஆனாலும் பரவாயில்லை… டியூஷன் மாணவருடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவி! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Dead Body 11zon

ஆசிரியர் – மாணவர் உறவு என்பது நம்பிக்கையையும் மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் சமீப காலமாக திரைப்படங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஆசிரியர் – மாணவர் உறவை காதலாக சித்தரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பிரதிபலிக்கும் வகையில் சண்டிகரில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பெண் ஒருவர், தன்னிடம் டியூஷன் படித்த மாணவருடன் நெருக்கமான உறவில் இருந்ததாக கூறப்படும் விவகாரம், இறுதியில் கணவரின் உயிரிழப்பில் முடிந்துள்ளது.


சண்டிகரைச் சேர்ந்த மோனு மற்றும் கோமல் ஆகியோர் சுமார் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்த நிலையில், கோமல் வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார்.

கோமலிடம் டியூஷன் படிக்க வந்த சன்னி என்ற 20 வயது இளைஞருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும், காலப்போக்கில் அந்த நட்பு திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மோனுவுக்கு தெரிய வந்ததும், அந்த உறவை முறித்துக் கொள்ளும்படி மனைவியிடம் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், அந்த உறவை முடிக்க முடியாது என்று கோமல் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரச்சினைக்கு தீர்வு காண இரு குடும்பத்தினரும் கலந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போதும் குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்க மறுத்த கோமல், விவாகரத்து ஏற்பட்டாலும் அந்த இளைஞருடனான உறவை கைவிட மாட்டேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர், தனது குழந்தையை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்ற கோமல், கணவரை தனிமையில் விட்டுச் சென்றுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மோனு, வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மோனுவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், கோமல் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆசிரியர் – மாணவர் உறவின் எல்லைகள் மற்றும் குடும்ப உறவுகளில் நம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்தும் சமூகத்தில் மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

Also Read: ‘பீரியட்ஸ்னு சொன்னாலும் கேட்க மாட்டார்’… கணவர் செய்த கொடுமையை வெளிப்படுத்திய விஜய் டிவி பிரபலம்!

Saranya

Next Post

"எனக்கு கிடைக்காத நீ… யாருக்கும் கிடைக்கக் கூடாது!" காதலை மறுத்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Tue Jul 28 , 2026
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததற்காக பள்ளி மாணவிகள் கூட தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. காதலை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை, பல நேரங்களில் கொடூரமான வன்முறைகளாக மாறி வருகிறது. அப்படிப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரங்கேறியுள்ளது. பிளஸ்-1 மாணவி ஒருவர் வீட்டிலேயே மர்ம நபரின் தாக்குதலுக்கு ஆளான […]
maalai malar 2026 07 26 67rf5pc6 Chidhambaram

You May Like