மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட்டு மேகதாது அணை கட்டும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக, தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்னை நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் உபரியாக வரும் நீரை மட்டும் காவிரியில் திறந்துவிட்டு, தமிழகத்திற்கான பங்கீட்டை அளவுக்கு அதிகமாக வழங்கி விட்டதாக ஒவ்வொரு முறையும் கர்நாடகா கூறி வருகிறது. இந்தச் சூழலில், பெங்களூரு அருகே ராம்நகர் மாவட்டத்தில் மேகதாது பகுதியில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி எடுத்து வருகிறது.
மேகதாது அணை விவகாரத்தில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் அடிப்படையில் தான், மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட்டு மேகதாது அணை கட்டும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கர்நாடாகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது தமிழக டெல்டா விவசாயிகளிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் வாதப்படி, கர்நாடாகாவில் ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே போதுமான அணைகள் உள்ளது.
எனவே புதிய அணை தேவையில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதனையும் மீறி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மேகதாது அணை கட்டுமானப் பணிகள் நடைபெறுமாயின் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் வறண்ட பாலை நிலமாகும் வாய்ப்பு அதிகம். கர்நாடாகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் இண்டி கூட்டணியில் அங்கம் வகித்து தமிழகத்தை ஆளும் திமுக மாநில உரிமைகளை விட்டுக் கொடுப்பது விடியா அரசின் கையாலாகாதனத்தையே காட்டுகிறது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட்டு மேகதாது அணை கட்டும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்திக் கொள்கிறேன்.



