மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனதை உலுக்கும் கொடூரக் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உஜ்ஜைன் மாவட்டம் மஹித்பூர் துல்சாபூர் கிராமத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு 4 வயதில் உமா என்ற குழந்தையும் 8 மாதத்தில் அனுஷ்கா என்ற இரு பெண்குழந்தைகள் இருந்தன. இந்த நிலையில் தனது இரு பெண் குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் தாய் பூஜா கொன்றிருக்கிறார்.
சம்பவத்தின் போது கணவர் வீட்டில் இல்லை. இரண்டு மகள்களையும் கொன்ற பிறகு, பூஜா நேரடியாக தனது மைத்துனியிடம் சென்று, “நான் என் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மைத்துனி உடனே போலீசாரிடம் புகார் அளித்தார்.
தகவல் கிடைத்ததும் மஹித்பூர் காவல்துறை சென்றனர். குழந்தைகள் இருவரின் உடலிலும் காயங்கள், ரத்தக்கசிவு போன்ற அடையாளங்கள் இருந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் செல்லும் வழியில் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். கொலை செய்யப்பட்ட சிறுமிகள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
ஒரு குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் வடியும் நிலையில் இருந்ததாகவும், மற்றொரு குழந்தையின் உடலில் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் தெளிவாக இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. முதற்கட்ட விசாரணையில் பூஜா மன நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் தற்போது பூஜாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.