முருகன் கோயில் கும்பாபிஷேகம்..! மதுரையில் நாளை பள்ளி & மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Holiday 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் 04.07.2025-ஆம் நாளிட்ட கடிதத்தில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா எதிர்வரும் 14.07.2025 (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளதால், மேற்படி மஹா கும்பாபிஷேக விழாவை காண பொதுமக்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்டம். என எதிர்பார்க்கப்படுவதாலும், மதுரை கலந்துக்கொள்வார்கள் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹர் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 14.07.2025 (திங்கட் கிழமை) அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்க அரசின் அனுமதியைக் கோரியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில், அழகர் திருவிழா, சித்ரா பௌர்ணமி ஆகிய திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அதற்கு ஈடு செய்யும் வகையில் ஒரு சனிக்கிழமை, அத்திருவிழாக்கள் / சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும் மாதத்திலோ அல்லது அதற்கடுத்த மாதத்திலோ பணி நாளாக அறிவிக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும், அரசு அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சித்தலைவரின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 14.07.2025 (திங்கட்கிழமை) அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் (பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறை அறிவிக்க மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, 19.07.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more : “75 வயசுல கூலிங் கிளாஸ் போட்டு Slow Motion-லயே நடந்து..” பிரபல இயக்குனருக்கு ரஜினி கொடுத்த தரமான பதிலடி..

Vignesh

Next Post

இன்று தவெக ஆர்ப்பாட்டம்...! சென்னையில் 2,000 போலீசார் பாதுகாப்பு... 16 கட்டுப்பாடுகள் விதிப்பு...!

Sun Jul 13 , 2025
இன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் தவெக ஆர்பாட்டத்திற்கு 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் […]
TVK protest 2025

You May Like