fbpx

இமாச்சல பிரதேசத்தில் நவ.12-ல் ஒரே கட்டமாக தேர்தல்.. குஜராத் தேர்தல் தேதி எப்போது?

மொத்தம் 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை, ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 44 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசால் 21 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

தற்போது, இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 45 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 22, சிபிஎம்-க்கு 1 எம்எல்ஏக்களும் உள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். 68 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு நவம்பர் 12-ம் தேதி தேர்தல், டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 29ஆம் தேதி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, 55 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 55,000 பேர் மாற்றுத் திறனாளிகள், 1.22 லட்சத்துக்கும் அதிகமானோர் 80+ மூத்த குடிமக்கள் மற்றும் 1.86 லட்சம் முதல் முறையாக இமாச்சலப் பிரதேசத்தில் வாக்காளர்களாக உள்ளனர் என்று ECI தெரிவித்துள்ளது.

தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக, தேர்தல் ஆணையம் 68 சட்டமன்ற தொகுதிகளில் 7,881 வாக்குச்சாவடிகளை அமைக்கும். சுமார் 142 வாக்குச் சாவடிகள் பெண்களாலும், 37 வாக்குச் சாவடிகள் திவ்யாங் மக்களாலும் இயக்கப்படும் என தேர்தல் ஆணையர் அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இம்முறையும் பாஜக – காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்றாலும், ஆம் ஆத்மி கட்சியும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை கைப்பற்றும் என கணிப்புகள் கூறுகின்றன.

இதேபோல், பாஜக ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.எனவே, இவ்விரு மாநிலங்களின் தேர்தல் அட்டவணையும் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படவில்லை. குஜராத்தில் பாஜகவிற்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

TRB: 2,849 காலிப்பணியிடங்களுக்கு... இன்று காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்...! தமிழக அரசு அறிவிப்பு...!

Sat Oct 15 , 2022
தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்கு, இயற்பியல் ஆகிய பாடங்களுக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்கு, இயற்பியல் ஆகிய பாடங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் மற்றும் அனைத்து கல்வி […]

You May Like