புதிய நாடாளுமன்ற கட்டிட சிறப்பு விழாவின்போது….! ஏற்பட்ட ஏற்படப்போகும் சுவாரஸ்ய நிகழ்வுகள் என்னென்ன….?

இன்று காலை 7:15 மணியளவில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திரமோடியும், மக்களவை சபாநாயகரும் தலைமையேற்று நடத்தினார்கள். நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கின்ற காந்தி சிலை அருகே பந்தல் அமைக்கப்பட்டு ஆரம்பமானது.

அதேபோல காலை 7.30 மணி அளவில் யாகம் வளர்க்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பூஜைகள் நடைபெற்றனர். அதில் பிரதமர் நரேந்திர மோடி, ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவனேஷ், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன் பிறகு காலை 8:30 மணி அளவில் புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். அப்போது சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தற்போது நாடாளுமன்றத்தின் நுழைவாயில் அருகே பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இந்தப் பிரார்த்தனைக்கு பிறகு முதல் கட்ட நிகழ்வுகள் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இதன்பிறகு இன்று காலை 11.30 மணி அளவில் 2ம் கட்ட நிகழ்வு ஆரம்பமாகிறது. திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட அனைத்து விருந்தினர்களும், முக்கியஸ்தர்களும் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகை தருகிறார்கள். அதன் பிறகு 12 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி வந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா ஆரம்பமாகிறது.

அதன் பின்னர் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவனேஷ் குடியரசுத் தலைவர் திரவுபதி மற்றும் குடியரசு துணை தலைவரின் வாழ்த்து செய்திகளை வாசிப்பார் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் 2 குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றனர். மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உரையாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விழாவை புறக்கணித்து விட்டதால் ஓம் பிர்லாவின் உரை மட்டும் நடைபெறும் அதன் பிறகு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதத்தில், 75 ரூபாய் நாணயத்தை நினைவு தபால் தலையுடன் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். கடைசியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பிறகு 2 மணி அளவில் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வருகின்றன.

Next Post

டிகிரி முடித்த நபர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்...! ‌

Sun May 28 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Deputy General Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 முதல் 12 வருடம் வரை அனுபவம் உள்ளவராக […]

You May Like