அய்யோ.. நான் ப்ளூ டிரம்முக்குள்ள சாக விரும்பல..!! கள்ளக்காதலனுடன் மனைவி..!! கணவன் செய்த தரமான சம்பவம்..!!

Crime 2026 1

உத்தரப்பிரதேச மாநிலம், சந்த் கபீர் நகர் மாவட்டம் டேவரி கிராமத்தை சேர்ந்தவர் புத்தி ராம் நிஷாத் (45). இவருக்கும் ஃபுல்மதி (37) என்பவருக்கும் இடையே கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 18 வயதில் மூத்த மகன் உட்பட மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புயல் வீசத் தொடங்கியது. ஃபுல்மதிக்கு அதே பகுதியைச் சேர்ந்த அவதேஷ் (26) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.


இந்த விவகாரம் கணவருக்கு தெரியவரவே, குடும்பத்தில் தினசரி தகராறுகளும் மனக்கசப்புகளும் எழுந்தன. கணவரின் அறிவுரைகளை பொருட்படுத்தாத ஃபுல்மதி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது 5 குழந்தைகளையும் கணவரையும் தவிக்கவிட்டு காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து, ஊர் பெரியவர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னெடுப்பில் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஃபுல்மதி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இருப்பினும், கணவருடன் வாழ விருப்பமில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்ததால், மீண்டும் வீட்டில் சண்டைகள் வெடித்தன.

தினமும் வீட்டில் நிம்மதியிழந்து தகராறுகள் நடப்பதைத் தவிர்க்க நினைத்த புத்தி ராம், மனைவியை வற்புறுத்தித் தன்னுடன் வைப்பதை விட, அவர் விரும்பிய நபருடனேயே அனுப்பி வைப்பதே சிறந்தது என்ற விசித்திர முடிவுக்கு வந்தார். அதன்படி, காதலன் அவதேஷை வரவழைத்து, அஷ்ரஃபூர் கிராமத்திலுள்ள சிவன் கோயிலில் ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மனைவிக்குக் காதலனுடன் முறைப்படி திருமணம் செய்து வைத்தார். அதோடு நிற்காமல், “பிடாய்” சடங்கு முறைப்படி இருவரையும் மனதார வாழ்த்தி வழியனுப்பியும் வைத்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புத்தி ராம், “எனக்கு பிளாஸ்டிக் டிரம்மிற்குள் அடைபட்டுச் சாக விருப்பமில்லை; நிம்மதியாக வாழ ஆசை இருக்கிறது. 21 வருடங்களுக்கு முன்பு நாங்களும் காதலித்துத்தான் திருமணம் செய்தோம். ஆனால், என் மனைவியின் மகிழ்ச்சியில்தான் எனது மகிழ்ச்சியும் உள்ளது என்பதால் இந்த முடிவை எடுத்தேன்” என்றார். இது தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களின் பரஸ்பர சம்மதத்தின் பேரிலேயே இந்நிகழ்வு நடந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு தன் கள்ளக்காதலை அறிந்த கணவரை கொன்று, உடலை பல துண்டுகளாக வெட்டி ‘ப்ளூ டிரம்மில்’ போட்டு சிமெண்ட் ஊற்றி மூடிய ‘முஸ்கான்’ சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கொடூரச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, “டிரம்மிற்குள் சாக விருப்பமில்லை” என கூறி கணவர் தனது மனைவியை தாரை வார்த்துக் கொடுத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Read More : மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்..!!

Next Post

அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லை..!! தவெக அரசை விளாசிய பிரேமலதா விஜயகாந்த்..!!

Thu Aug 6 , 2026
விவசாயிகளுக்கு நன்மை செய்ய அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லை. இந்த ஜென்மத்திலேயே தேவையான நன்மைகளை செய்து முடிக்கலாம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை […]
premalatha

You May Like