நகைக்காக மூதாட்டி படுகொலை……! நள்ளிரவில் நடந்த பயங்கரம்…..!

தமிழகத்தில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இவற்றை எல்லாம் தடுக்க வேண்டும் என்பதற்காக காவல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்க கொண்டு வருகிறது. ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் குறைந்த பாடு இல்லை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள புளிப்பா குட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பாவாய் 66 இவருடைய கணவர் கடந்த 10 வருடத்திற்கு முன்னரே உயிரிழந்து விட்டார்.

ஆனால் இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வீட்டில் தனியாக ரசித்து வருகிறார் இவர்களுக்கு மணி என்கின்ற கனகராஜ்(39) என்ற ஒரே மகன் இருக்கிறார்.

இவர் தற்சமயம் அபுதாபியில் வேலை பார்த்து வருகின்றார் இவருடைய மனைவி அரூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வருகிறார். மூதாட்டியின் வீட்டில் எலக்ட்ரீசியன் பணி நடந்து வருகின்றது. அதற்காக வீட்டின் சுற்றுச் சுவரில் துளையிட்டு வேலை நடைபெற்று வந்தது.

கடந்த 9ம் தேதி நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்தனர். அதன் பிறகு பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் இரண்டு சிலிண்டர் மற்றும் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

ஆகவே மிக நீண்ட நேரமாக வீட்டில் இருந்து மூதாட்டி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவருடைய உறவினர்கள், வீட்டிற்கு சென்று பார்த்தபோது மூதாட்டி படுக்கையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆயில்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் தடயவியல் துறை நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். அதன்பிறகு மோப்பநாய் வீட்டிலிருந்து சற்று தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது, ஆனால் யாரையும் கண்டுபிடிக்கவில்லை.

அதோடு மூதாட்டி உடலை இணைத்து பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆயில்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீட்டில் வேலை பார்த்து வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் கொலை செய்தவர்கள் தொடர்பாக எந்த விதமான தகவலும் கிடைக்காத நிலையில் ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேர்தல் வேட்டையில் காவல்துறை இறங்கியது.

இது குறித்து நரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியில் செந்தில் (38) என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் நகை மற்றும் பணத்திற்காக மூதாட்டி பாவாயியை கொலை செய்து பணம் சிலிண்டர் போன்றவற்றை திருடியது தெரிய ல்வந்தது.

இவரிடமிருந்து 1200 ரூபாய் பணம் 2️ கேஸ் சிலிண்டர் Bosch tools box திருடுவதற்காக பயன்படுத்திய டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர், பீரோவை உடைப்பதற்கு பயன்படுத்திய கடப்பாறை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

இவர் ஏற்கனவே ஆயில் பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெட்டாலா தொடக்க வேளாண்கூட்டுறவு வங்கி திருட்டு வழக்கில் முன்தண்டனை குற்றவாளி ஆவார். அத்துடன் கொலையான மூதாட்டி நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தியின் சித்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்..!! பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ கடும் எச்சரிக்கை..!!

Sun Feb 19 , 2023
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வு திருத்துதல் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எவ்வித தவறுகளும் நடைபெறாதவாறு நடத்தி முடித்து விடைத்தாள்களையும் உரிய முறையில் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 நாட்களில் […]

You May Like