Sunday அதுவுமா இப்படியா? மீண்டும் எகிறியது வெங்காயம் விலை! ஒரு கிலோ டாப் ரேட்!

onion new

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்ந்து 50 ரூபாயை கடந்தது. இதையடுத்து ரேஷன் கடைகள் வழியாக கிலோ 35 ரூபாய்க்கு மானிய விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு முன்னெடுத்த போதிலும், வெளிச்சந்தையில் விலை உயர்வை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.


சமீபத்தில் 46 ரூபாய் வரை குறைந்திருந்த நாசிக் முதல் ரக வெங்காயத்தின் மொத்த விலை, தற்போது மீண்டும் உயர்ந்து கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ஆந்திர வெங்காயம் அளவைப் பொறுத்து கிலோ 36 முதல் 42 ரூபாய் வரையிலும், கர்நாடக வெங்காயம் 38 முதல் 60 ரூபாய் வரையிலும், சிறிய ரக நாசிக் வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிலேயே மொத்த விலை உயர்ந்ததன் எதிரொலியாக, சென்னை நகரின் புறநகர் மற்றும் வெளிச்சந்தை சில்லறை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.

நவராத்திரி பண்டிகை காலத்தில் வடமாநில விவசாயிகள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதை குறைத்ததே இந்த வரத்து வீழ்ச்சிக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளி நெருங்கும் வேளையில் தங்களிடம் உள்ள இருப்பு வெங்காயத்தை வடமாநில வியாபாரிகள் சந்தைக்கு அனுப்ப வாய்ப்புள்ளதால், ஓரிரு நாட்களில் விலை சற்றே குறையலாம் எனவும், எனினும் பண்டிகை தேவையை கருத்தில் கொண்டு நவம்பர் தொடக்கத்தில் மீண்டும் விலை உயர்ந்து புதிய அறுவடைக்கு பிறகே முழு கட்டுக்குள் வரும் எனவும் கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : இன்று எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்? 31 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வார்னிங்!

Next Post

உருவாகிறது புதிய புயல்! 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! மீனவர்களுக்கு உச்சகட்ட வார்னிங்!

Sun Oct 25 , 2026
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒன்பது முக்கிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்த இந்த வானிலை அமைப்பு, இன்று அடுத்தடுத்த நிலைகளில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற உள்ளது. […]
Cyclone 2025

You May Like