தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைப் பூர்த்தி செய்யப்பட்டவுள்ளன. ஏற்கெனவே, விண்ணப்ப பதிவு மேற்கொள்ள தவறிய மாணவர்களும் இணையதளத்தில் பதிவை மேற்கொள்ள உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைப் பூர்த்தி செய்யப்பட்டவுள்ளன. ஏற்கெனவே, விண்ணப்ப பதிவு மேற்கொள்ள தவறிய மாணவர்களும் இணையதளத்தில் பதிவை மேற்கொள்ள உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடன் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கு இணையத்தில் விண்ணப்பப் பதிவை செப்டம்பர் 30 வரை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


