புதுக்கோட்டை: ஸ்பா சென்டரில் ஹைடெக் விபச்சாரம்! 4 பெண்கள், உரிமையாளர் மற்றும் மேனேஜர் கைது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் அருகே ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை நகரத்தில் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது அங்கு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் ஆகியவையும் இயங்கி வருகின்றன. இங்கு இயங்கி வரும் மசாஜ் சென்டரில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த விடுதியை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்ததில் அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அந்த விடுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் விபச்சாரத்தில் ஈடுபட்ட நபர்களை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளர் சண்முகசுந்தரம் (35) மற்றும் மேலாளர் சுதா(37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் பிடியிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பெண்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

"ஷூ வை நான் எடுக்க சொல்லவில்லை"! காலணிகளை தூக்கி வரச் சொன்ன கலெக்டர் விவகாரம்! கலெக்டர் மறுப்பு!

Wed Apr 12 , 2023
தமிழ்நாட்டைச் சார்ந்த கலெக்டர் ஒருவர் உதவியாளரை தனது காலணிகளை தூக்கி வருமாறு கட்டளையிட்டதாக வெளியான வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த கலெக்டர் சரவணகுமார் ஜதாரவத் கோவிலுக்குள் சாமி கும்பிட சொல்லும் போது தனது காலணிகளை உதவியாளரிடம் தூக்கி வரச் சொல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பதிலளித்துள்ள கலெக்டர் தான் அப்படி கூறியதாக சொல்வது பொய் […]
collector

You May Like