fbpx

தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் அதிமுகவை தேடி வரும் வகையில் களப்பணி ஆற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த 10ஆம் தேதி …

பிரேசிலியன் லீக் இரண்டாவது டிவிசனின் 12-வது சுற்று ஆட்டத்தின் முடிவில் ஏற்பட்ட கைகலப்பின் போது, பிரேசில் கால்பந்து வீரர் ஒருவரின் காலில் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக செண்ட்ரோ ஓஸ்டி, கிரேமியோ அனாபோலிஸைத் (2-1) என தோற்றகடித்த நிலையில், ஆட்டத்தின் கடைசி விசிலை நடுவர் ஊதியதும் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. …

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்விக்கு காரணம் என்ன.? நிர்வாகிகளின் செயல்பாடு உள்ளிட்டவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பேசிய நிர்வாகிகள், கூட்டணி பலமாக அமைக்காதது, …

தமிழ்நாட்டில் இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு, கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டிடம் கட்டியிருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படாது. எனவே, கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை கடைபிடித்து …

மக்களவைத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைக்காததால் வட மாவட்டங்களில் அதிமுக தோல்வி அடைந்ததாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக 3 ஆவது நாளாக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அரக்கோணம் மக்களவைத் …

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பல் மருத்துவமனையை திறந்து வைத்தப் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, ரூ. 10 லட்சம் இல்லை.. 20 லட்சம் வேண்டுமானாலும் முதல்வர் கொடுப்பார். கொள்கை முடிவு எடுப்பது முதல்வரின் முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது …

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் …

நம்மில் பலருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். இந்த கனவை நிறைவேற்ற அரசு மானியத்துடன் கூடிய கடன் வழங்கி உதவி வருகிறது. அப்படி ஒரு திட்டம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் மூலம் வருமானத்தை பெருக்குவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி மத்ஸ்ய …

பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 9 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொண்ட அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. குறிப்பாக தென்சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, வேலூர், தேனி, ராமநாதபுரம், புதுச்சேரி …

100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் சமீபத்தில் கரூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க …