fbpx

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கான தேர்தலும் வரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “2024இல் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வர உள்ளது. அப்போது அதிமுக …

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் வாழை விவசாயிகளுக்கு கடன் வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக …

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகிறார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கியது. பொதுக்குழு உறுப்பினர்களில் 95% பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் …

நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது.

அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 மற்றும் ஜூலை 11 ஆம்
தேதி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் …

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் பணி நடைபெற்று வருகிறது.

அதிமுக இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வந்த நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த …

”நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் குறித்து பேசியதாக கூறுவது, தவறானது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

டெல்லி சென்று திரும்பிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கியமான சில விஷயங்களை பேசினோம். அதில் கோதாவரி …

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக …

துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவிய நிலையில், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2009இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக்காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை …

தமிழ்நாட்டில் பொம்மை முதலமைச்சராக முக.ஸ்டாலின் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து, செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். திராவிட மாடல் ஆட்சி எனக்கூறி முதலமைச்சர் முக.ஸ்டாலின் மக்களை …

அதிமுகவை பிளக்க நினைப்பவர்கள் கானல் நீர் போல மறைந்து போவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “இரண்டு ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த கட்சி …