தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. இவர், நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் இதுவரை 7,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து பல பெண்களும் வைரமுத்து மீது […]

பிரபல சர்ச்சைக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர், தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்தார். பின்னர், சன்டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி ஆவார். சித்ராவின் தற்கொலை ரகசியங்கள் குறித்து பல யூடியூப் சேனல்களில் பேட்டி […]

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான, நாகர்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியார் பேராலயத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் நாளான டிச.1ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட அருள் பணியாளர்கள் தலைமை வகித்து ஆடம்பரக் கூட்டு திருப்பலி நிறைவேற்றுகின்றனர். கோட்டாறு பங்கு அருள்பணிப் பேரவையினர் சிறப்பிக்கின்றனர். டிசம்பர் […]

ஆவின் டிலைட் பால் டிச.1ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்துள்ள ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தப்படுவதாகவும், அதற்கு பதிலாக 3.5% கொழுப்புச் சத்து கொண்ட ஊதா நிற டிலைட் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன்? என அமைச்சர் மனோ தங்கராஜ் […]

வாட்ஸ் அப் மூலம் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடி என்பது உலகளவில் பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட, இந்தியாவில் தான் அது அதிகமாக நடைபெறக்கூடிய குற்றமாக இருக்கிறது. அதிலும் தற்போது வாட்ஸ் அப் செயலி வாயிலாக அதிகளவில் ஆன்லைன் மோசடி நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாட்ஸ் அப் புதிய அப்டேட் […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றுமே இல்லை. ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது தமிழில் இதன் 7-வது சீசன் நடந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் 50 நாட்களைக் கடந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் குறித்து நடிகை ராதிகாவிடம் அவர் கலந்து கொண்ட சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கேள்வி […]

தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி என்பது அதிகரித்துள்ளது. இதுகுறித்த பல விழிப்புணர்வுகளை அரசு சார்பிலும் பிறர் சார்பிலும் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம், இவ்வகையான மோசடிகள் ஒரே விதத்தில் நிகழாமல் வித விதமான யுக்திகள் மூலம் கையாளப்பட்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆதார் மூலம் தற்போது வங்கிக் கணக்கில் பணம் திருடு போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. AEPS (adhaar enabled payment System ) என்னும் […]

கோவையில் பிரபல நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு சுமார் 25 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையின் முக்கிய வணிகப்பகுதியான காந்திபுரம் 100 அடி சாலையில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே, வசந்த் அன் கோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட கடைகளும் செயல்பட்டு வருகின்றன. நேற்றிரவு நகைக்கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்ற நிலையில், இன்று காலை […]

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால், அக்டோபர் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை கிடைக்கவில்லை. பருவமழை அளவு பற்றாக்குறையாகவே இருந்தது. தற்போது நவம்பர் மாதத்தில் ஓரளவுக்கு நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையே, வங்கக்கடலில் அந்தமான் அருகே நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு […]

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி, அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]