ஆயுர்வேதத்தில் பல வீட்டு வைத்தியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் உடலை நீண்ட நேரம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று காலையில் வெறும் வயிற்றில் பூண்டு மற்றும் தேனை சாப்பிடுவது. பாட்டிகள் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டை தேனில் நனைத்து வெறும் வயிற்றில் சாப்பிட அறிவுறுத்துவதை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்தில், பிரபல ஆயுர்வேத மருத்துவர் சலீம் ஜைதி தனது யூடியூப் சேனலில் இது […]
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டது. தொழில், கல்வி மற்றும் பொதுவாழ்க்கையை கடுமையாக பாதித்த இந்த தொற்றால், பலரும் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், முழு ஊரடங்கின் தாக்கம் நேரடியாக தெருவோர வியாபாரிகளை பாதித்தது. இதனால், அவர்களின் வாழ்வாதாரமே முடங்கியது. அப்போது தான், மத்திய அரசு ”பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி” (PM SVANidhi) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. […]
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும். ஜனவரி 9-ல் கடலூரில் நடக்கும் மாநாட்டில், கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எடப்பாடி பழனிச்சாமி வேறு டிராக்கில் மக்களை சந்திக்கிறார். நாங்கள் எங்கள் கட்சியின் செயல்பாடுகள் அடிப்படையில் பயணம் செய்கிறோம். எங்கள் பயணம் வேறு, அவரின் பயணம் வேறு. […]
தற்போதைய நவீன வாழ்கையில் அனைவரும் மரங்களை வளர்த்து பராமரிக்க முடியாமல் போனாலும், சிறிய செடிகளை வளர்ப்பது ஏதுவாக உள்ளது. இது வீட்டிற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்கிறது. அதற்கு மேலாக, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில செடிகள், நம் வீடுகளுக்குள் நன்மைகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, வீட்டின் நிதி நிலையை மேம்படுத்தும் செடியைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். பணத்தை ஈர்க்கும் செடி என்றாலே […]
பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 -15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் […]
உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சுவாசத்தை சுத்தமாக வைத்திருப்பது முதல் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது வரை, உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்றக்கூடிய பல்வேறு வழிகள் உள்ளன. இருப்பினும், இவை பெரிய பழக்கவழக்கங்கள் மட்டுமே, மேலும் உங்கள் நுரையீரலை சேதப்படுத்தும் சிறிய அன்றாட விஷயங்கள் இருக்கலாம், அவற்றில் ஒன்று உங்கள் தலையணை. உங்கள் தலையணை பழையதாகி, சரியாக பராமரிக்கப்படாவிட்டால், அது நுரையீரலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும். குருகிராமில் […]
தற்போதைய இளைய தலைமுறை பெண்கள், காலில் கருப்பு கயிறு அணிவது பரவலாக இருந்து வருகிறது. ஆனால், இது அழகுக்கான அலங்காரமல்ல. இதன் பின்னால் பழமையான மரபுகள், நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக காரணங்கள் உள்ளன. பண்டைய தமிழ் சமூகத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடலைத் தீய ஆற்றல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தக் கருப்பு கயிறை அணிந்தனர். மரபின்படி, பெண்கள் இடது காலிலும், ஆண்கள் வலது காலிலும் கருப்பு கயிறை கட்டுவது […]
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் ஒரிசாவை நோக்கி நகரக்கூடும். இதன் […]
வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற உள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து இன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன. வருங்கால வைப்பு நிதி […]
கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்று கூறப்படுகிறது. புதன்கிழமை மழை சற்று தணிந்தாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் […]

