உலகில் உயரமான விநாயகர் சிலை எங்கு உள்ளது தெரியுமா? இந்தியாவில் இல்லை! விநாயகருக்கென எண்ணற்ற கோவில்களும் சிலைகளும் உள்ள தாயகம் இந்தியாவே என்றாலும், அந்த மிக உயரமான விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை. 39 மீட்டர் உயரமுள்ள விநாயகர் சிலை தாய்லாந்தின் சச்சோஎங்சாவ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது இன்று ஒரு முக்கிய யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலா தலமாக வளர்ந்துள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவராகவும், ஞானத்தின் கடவுளாகவும் வழிபடப்படுகிறார். தென்கிழக்காசியாவில் […]

கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை அனுப்பியது. 40 நாட்கள் அது விண்வெளியில் பயணித்து, சரியாக ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனையை படைத்தது. இதனால், உலக நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் மென்மையான தரையிறக்கத்தை நிறைவு செய்த 4-வது நாடு என்ற வரலாற்று […]

வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து 2025 ஆகஸ்ட் 28 அன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன. வருங்கால […]

கணவன் வேலை இன்றி இருக்கும் நிலையிலும், பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு கொண்டிருக்கும் காலத்திலும், அவரை இழிவுபடுத்துவது அல்லது நியாயமற்ற கோரிக்கைகளை வற்புறுத்துவது மனரீதியான கொடுமைக்கு சமம் என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதி ரஜனி துபே மற்றும் நீதிபதி அமிதேந்திர கிஷோர் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு ஆணுக்கு விவாகரத்து வழங்கும்போது இந்தக் கருத்தை வெளியிட்டது. அதாவது COVID-19 தொற்றுநோய் காலத்தில் வேலை இன்றி இருந்த கணவனை […]

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளுக்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் ஒவ்வொரு வகையான கட்டிடத்துக்கும் மதிப்பு நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு. அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர், இடத்தை விலைக்கு வாங்கி, குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, அதன்பின் வாங்க வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்வது வழக்கம்.குடியிருப்பு வாங்க முன்வருவோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தின் பிரிக்கப்படாத பாக […]

நீங்கள் இரவில் படுக்கையில் அலைமோதிக் கொண்டு சரியான நித்திரை பெறாமல் இருந்தால், இந்தக் கடுமையான பிரச்சினையை கவனத்தில் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிபுணர்களின் கூற்றுப்படி, தூக்கமின்மை அல்லது ஒழுங்கற்ற உறக்கம் நீண்ட காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக அமையக்கூடும். பகலில் சோர்வாகவும் தூக்க கலக்கத்துடனும் உணரச் செய்வதோடு மட்டுமல்லாமல், தூக்கமின்மை உங்கள் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதோடு, உடல் எடை அதிகரிக்கும் அபாயத்தையும் உருவாக்குகிறது. ஆனால், […]

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. […]

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி […]