இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை, விஷ்ணுவின் அவதார நாயகனான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமாக நாடெங்கும் மிகுந்த பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் அதர்மங்கள் தலைதூக்கி, தீய சக்திகளின் ஆதிக்கம் பெருகும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும் நல்லோரை காக்கவும் தான் யுகம்தோறும் அவதரிப்பதாக பகவத் கீதையில் கண்ணன் அருளிய வாக்கின்படி, தீமைகளை அழித்து நன்மைகளை துளிர்க்கச் செய்த புனித நாளாக இந்நாள் போற்றப்படுகிறது. பக்தர்கள் […]

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப், தனது பயனர்களின் வசதிக்காக புதிய கட்டணச் சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இனி தங்கள் அன்றாட அத்தியாவசிய பயன்பாட்டுக் கட்டணங்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தே நேரடியாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தும் வகையில் இந்த அதிரடி மாற்றத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இச்சேவை NPCI கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வ ‘பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்’ (Bharat […]

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கடாசலத்தின் குடும்பத்தில் சொத்துத் தகராறு முற்றிய நிலையில், அவரது தம்பியைச் சொந்த அண்ணனே விரட்டிச் சென்று கத்தியால் குத்தி, சிலிண்டரை தலையில் போட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலத்தின் முதல் மனைவி மகனான ராஜபாண்டி, அதிமுக அம்மா பேரவையின் மாநில இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது […]

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 500- மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில், பாதிக்கப்பட்ட மாணவனை வகுப்பறையிலேயே நிர்வாணப்படுத்தி நிற்க வைத்து, ஸ்கேல் மற்றும் ரப்பர் பேண்டுகளால் பிறப்புறுப்பில் அடித்து தாக்கியுள்ளனர். ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவியும், பபுள்கம்மை ஒட்டியும் […]

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரையில் பயன்படுத்திய சொல்லாடல் அவையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டுப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசுகையில் ‘கற்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு அவையிலேயே உடனடியாக எழுந்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார் […]

தங்களை ‘கைலாசாவின் ஆன்மிக தூதரக உறுப்பினர்கள்’ என அறிமுகப்படுத்திக் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது, கைலாசாவிற்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையே நல்லுறவு மற்றும் நட்புறவை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். புதுச்சேரி ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள நித்யானந்தாவின் ‘கைலாச தியானபீடத்தில்’ அடுத்த ஆண்டு கும்பாபிஷேக விழா […]

ராணிப்பேட்டை தெங்கால் பாலாற்றங்கரை அருகேயுள்ள அரசுக்கு சொந்தமான பண்ணைப் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் அமர்ந்து நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த 3 பேர், தகராறு செய்து காதலனை கண்மூடித்தனமாக தாக்கினர். பின்னர், கத்திமுனையில் மிரட்டி அந்த இளம் பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய […]

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் வாக்குறுதி முரண்பாடுகளைக் கடுமையாக சாடினார். மக்கள் சார்பாக ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கவே எதிர்க்கட்சியாகத் தங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பழிபோடும் தந்திரங்களில் ஈடுபடாமல் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 2024-ம் ஆண்டை விட 2025-ல் வழிப்பறி, திருட்டு, கொலை, கலவரம், […]

நேபாள திடீர் வெள்ளத்தால் 1200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் இன்று ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின்தகவல்படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி பிற்பகல் […]

காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்க முதல்வர் நன்றாக தயாராகி வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு நான் தயாராக இருக்கிறேன் ஆனால், நீங்க யாரும் ஓடிவிடக்கூடாது என்று முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் […]