கனவுகளைத் தொடர வயது ஒருபோதும் தடையாக இருக்க வேண்டியதில்லை. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்தியிருந்தாலும், மீண்டும் கற்றலைத் தொடங்குவதற்கான வாய்ப்பு எந்த வயதிலும் கிடைக்கலாம். இதற்கு அழகான உதாரணமாக மும்பையைச் சேர்ந்த ஒரு தாயின் புதிய கல்லூரி பயணம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தன்வி மல்ஹாராவின் தாய் டாக்டர் நளினி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாணவியாக கல்லூரிக்குச் சென்றுள்ளார். மகள் கல்லூரிக்குச் செல்லும் […]
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டைச் சுற்றி திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அவரது வீடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதலே தில்லைநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கே.என்.நேருவின் வீட்டுக்குள் சென்று சோதனையை தொடங்கினர். வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் வழக்கு […]
கேரள மாநிலம் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய கோர விபத்தில், காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளா எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]
சென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவம் நகரின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. அடையாறு வண்ணாந்துறை பகுதியில் தவெக நிர்வாகி கண்ணன் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கண்ணனை இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் திடீரென சுற்றிவளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கண்ணன் ஓடியபோதும், அந்த கும்பல் […]
உலக நாடுகள் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சில பாதிப்புகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாத நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக பனிப்பாறைகள் உருகுவது, கடல் மட்டம் உயர்வது, உயிரினங்கள் அழிவது போன்ற மாற்றங்கள் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை நெருங்குவது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் […]
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்ற 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சிறுமியின் கால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பின்னர் கால் அகற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பரமத்திவேலூரைச் சேர்ந்த சிறுமி கவிஷ்காவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், காலில் போடப்பட்ட கட்டு இறுக்கமாக […]
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் துக்குகுடாவில் உள்ள ‘பிரைம் கேர்’ தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் செவிலியர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 34 வயது மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். துக்குகுடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏழு மாதங்களாக செவிலியராக பணியாற்றி வந்தவர் யூகே ஷிரீஷா (21). மருத்துவமனை நிர்வாகம் அருகிலேயே ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்தில் சக ஊழியர்களுடன் தங்கி பணிபுரிந்து […]
ஜம்மு காஷ்மீர் பட்காம் மாவட்டம் யூஸ்மார்க் உயரமான மலைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி யாசிர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். யூஸ்மார்க் மலைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த துல்லியமான உளவுத்துறை தகவலை அடுத்து இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் படையினர் இணைந்து அப்பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய […]
சென்னை அடையாறு அடுத்த வண்ணாந்துறையை சேர்ந்தவர் கண்ணன், வயது 45. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதிமுகவில் வட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த இவர், சில மாதங்களுக்கு முன் தவெகவில் இணைந்தார். சனிக்கிழமை இரவு வெளியே சாப்பிட சென்றவர், அங்கிருந்து ராமசாமி அவின்யூவில் உள்ள அவரது அலுவலகத்துக்கு போனார். அப்போது கண்ணன் செல்லும் வழியை நோட்டமிட்ட கும்பல், அலுவலக வாசலில் சுற்றி வளைத்தது. இரண்டு பைக்குகளில் வந்த 6 […]
குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். ஓபிசி மக்களின் உரிமையை காப்பாற்ற நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு தற்போது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை (OBC) கணக்கெடுக்க ‘திறந்தவெளி பதிவு முறையை’ (Open-ended format) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். […]

