உத்தரகாண்டின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மாயமாகி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அல்கநந்தா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், சுமார் 7 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே […]

2026 தேர்தலில் விசிகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கத் தயார் என இபிஎஸ் தூது விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் சந்தித்து கொண்டனர். அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இரு கட்சியின் நிர்வாகிகளும் தங்களது கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று கூறி வருகின்றனர். […]

தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், கடந்த 2016ல் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-அரசு பணிகளில் பதவி உயர்வுகளில் மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு என […]

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.72,560க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் […]

இந்து மதத்தில், ‘ஓம்’ என்று உச்சரிப்பது ஆன்மீக ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, சிறப்பு என்னவென்றால், அது ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் அற்புதம். ‘ஓம்’ என்று உச்சரிப்பது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், இதயம், நுரையீரல் மற்றும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஓம் என்பது விழிப்புணர்வின் ஒலி அல்லது ‘முதல் ஒலி’ என்றும் கருதப்படுகிறது. இயற்பியல் படைப்பு தோன்றுவதற்கு […]

நோ டவுன் பேமென்ட், V, மிஸ்ஸிங் இன் ஆக்ஷன் III ஆகிய படங்களில் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளராக செயல்பட்ட பாலிவுட் பிரபலம் அகி அலியோங் வயது 90-ல் காலமானார். டிமென்ஷியா என்னும் நியாமக மறதி நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஜூன் 23ஆம் தேதி திங்கட்கிழமை, கலிபோர்னியாவின் சில்மரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது 38 வயதான மனைவி கான்சிட்டா, உறுதிப்படுத்தினார். சிறுபான்மையினருக்காக […]

பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். சீனாவின் கிங்டாவோவில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், SCO உறுப்பினர்கள் பயங்கரவாதத்தைக் […]

முஸ்லிம் பெண்கள் குலா மூலம் தங்கள் திருமணத்தை முடிக்க முழு மற்றும் நிபந்தனையற்ற உரிமையைக் கொண்டுள்ளனர் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும், இதற்கு கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்லது. குலா என்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் விவாகரத்து செய்யும் ஒரு வடிவமாகும், குலா (Khul’) என்பது இசுலாம் சமயத்தில் கணவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மனைவி கணவனை திருமண முறிவு […]

தனியாக வசிப்போர் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்காக விரைவாக தயாரிக்கக்கூடிய சிற்றுண்டியாக கருதப்படும் நூடுல்ஸ், தற்போது விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறம் “புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க பாதிப்பு ஏற்படலாம்” என்ற எச்சரிக்கை வாசகம் காணப்படுவதால், நூடுல்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. ‘omggotworms’ என்ற பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறத்தில் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ள […]

சீனாவில் வயிற்று வலி இருப்பதாக கூறி மருத்துவமனைக்குச் சென்ற 64 வயது நபரின் குடலில் இருந்து டூத் ப்ரஷி மருத்துவர்கள் அகற்றினர். இதில் ஆச்சரியமான விஷியம் என்னவென்றால் 17 செ.மீ. நீளமுள்ள டூத் ப்ரஷ் அவரது உடலில் 52 ஆண்டுகளாக சிக்கியிருப்பது தெரியவந்தது. South China Morning Post வெளியிட்ட செய்தியின்படி, அந்த நபர் சீனாவின் குவாங்டாங் மாகாண பகுதியை சேர்ந்த யாங் (Yang) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து […]