இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, இதய நலம் குறித்து நாம் எடுத்துக்கொள்ளும் கவனக்குறைவுகள், பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கக்கூடும். இதற்கு முக்கியமான பங்கு வகிப்பது கொழுப்பு தான். உடலில் LDL, அதாவது கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது, அது தமனிகளில் தங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைந்து, இருதய சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகக்கூடும். ஆனால், வாழ்கைமுறை மாற்றங்கள் சில, இந்த […]

I.N.D.I.A கூட்டணி கட்சிகள் கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே என்று அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமருக்குக் கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது என்று பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தத்துக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஆச்சரியமில்லை என பாஜக முன்னாள் […]

நாம் பெரும்பாலானோர் கோவிலுக்குச் செல்லும் போது, முதலில் செய்யும் வேலை அர்ச்சனைக்கு தேவைப்படும் பொருட்கள் வாங்குவது தான். பூ, பழம், கற்பூரம், மற்றும் குறிப்பாக தேங்காய். இதெல்லாம் நம்மால் வெளியே பார்த்து தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், ஒரு தேங்காயின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை நாம் கண்களால் கணிக்க முடியாது. ஒரு தேங்காயின் வெளிப்புற தோற்றம் நன்கு முற்றியதா அல்லது இளம் தேங்காயா என்பதைப் பற்றி மட்டுமே தெரியும். ஆனால், […]

பள்ளிக்கல்வித் துறையில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி கரையவெட்டி (அரியலூர்), சிறுக்களஞ்சி (ஈரோடு), மேட்டுநாசுவம்பாளையம் (ஈரோடு), நத்தம் (கடலூர்), […]

பிரதோஷம் என்றால் உடனே நம்முடைய நினைவுக்கு வருவது சிவபெருமானின் அருள் பெரும் நேரம் தான். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் முன் வரும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும் பிரதோஷ காலத்தில், சிவ ஆலயங்களில் நந்தி முன் அமர்ந்து சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வழக்கமாக புதன்கிழமைகள் பெருமாளுக்குரிய நாளாகக் கருதப்படும். இந்த நாளில் பிரதோஷம் வரும்போது, நரசிம்மருக்கு […]

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் ஒரு சில இடங்களிலும், ஆகஸ்ட் 24-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய […]

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி தலைமையில் ஏராளமானோர் மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த்திடம் நேற்று புகார் மனு அளித்தனர். புகார் மனு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 18ம் தேதி பிரசாரம் செய்தார். […]

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டதாரிகளுக்கும், டிப்ளமா முடித்தோருக்கும் ட்ரோன் தயாரிப்பு, எம்பெட்டெட் சென்சார் சோதனை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தாட்கோ நிறுவனம், சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, […]

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. […]