இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.. அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பின் உணர்வு எவ்வாறு மீறப்பட்டது, பாராளுமன்றத்தின் குரல் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதை எந்த இந்தியரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.. இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பதிவுகளில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். […]

உடல் எடை குறையாமல் இருப்பதற்கு 12 காரணங்கள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, மெதுவான வளர்சிதை மாற்றம், தூக்கமின்மை, கார்டிசோல் மற்றும் குடல் சுகாதார பிரச்சினைகள் ஆகியவை முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவைக் கட்டுப்படுத்தி, தினமும் நடைப்பயிற்சி செய்து, நீரிழிவு, கொழுப்புச்சத்து போன்றவை கவனித்தும் எடை குறையாமல் தவிக்கிறீர்களா? உங்கள் முயற்சிகள் பலனளிக்காததற்குப் பின்னால் சில ஆழமான உடல்நலப் பிரச்சினைகள் இருக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். […]

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், […]

1975 ஆம் ஆண்டு, ஜூன் 25 மற்றும் 26ம் தேதிக்கு இடைப்பட்ட இரவுகளில் இருந்து 1977 மார்ச் 21 வரை (21 மாதங்கள்), அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். இன்று இந்த அவசரநிலை 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, இந்திய அரசியலமைப்பின் 352 வது பிரிவின் கீழ் […]

அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை என்று கூறும் உளவுத்துறை அறிக்கையை ட்ரம்ப் நிராகரித்தார். ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் வெற்றிபெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அழிக்கவில்லை என்று கூறப்பட்டது.. மேலும் இந்த தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தியிருக்கலாம் என்ற ஆரம்பகால உளவுத்துறை தகவல்கள் வெளியானதாக சிஎன்என் நிறுவனம் […]

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரஜோரியின் கெரி செக்டரில் உள்ள பாரத் காலா பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளில் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் பதுங்கியுள்ள 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். காலை 8 மணி முதல் 9 மணி வரை, பாரத் காலா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை இந்திய ராணுவம் கண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊடுருவல் முயற்சி கண்டறியப்பட்டவுடன், […]

நிலம், வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் போது பத்திரப்பதிவில் பொதுவாக மக்களிடையே இருக்கும் கவனத்தை விட, பட்டா பெறும் நடவடிக்கையில் இன்னும் அதிக கவனம் தேவை என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சிறிய தவறுகள் கூட, பின் நாட்களில் நீண்ட கால நீதிமன்ற வழக்குகளாக மாறும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். நிலம் வாங்கும் முன் பின்பற்ற வேண்டியவை: விளை நிலங்களை வீட்டு மனையாக மாற்றி, DTCP அனுமதியின்றி விற்பனை […]

திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ்வழியில்) 6-12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த நிபந்தனையை […]