ரஷ்யாவின் சில பகுதிகளில், பள்ளி மாணவியர் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைய துவங்கி உள்ளது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனாவே தற்போது பின்தங்கிவிட்டது.சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு […]

அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்கான திறன் இயக்கத்தை அமல்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழி மற்றும் கணிதப் பாடத்தின் கற்றலை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் […]

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் […]

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பணி நிரவலுக்கு உட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி ஆணை பெறுமாறு வற்புறுத்தக் கூடாது. அதேபோல், வற்புறுத்தி பணிநிரவல் […]

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாகவும், ரூ.500 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழையால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மலைப்பகுதி முழுவதும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் (SEOC) கூற்றுப்படி, இந்த உயிரிழப்புகள் ஜூன் 20 முதல் ஜூலை 4, 2025 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தன, கனமழையால் ரூ.541 […]

தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் களப்பணி மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியில் சேரும் அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில […]

அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில புளூடூத் ஹெட்ஃபோன்கள், இயர்பட்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நீண்டகால பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய செவிப்புலன் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த ஹெட்ஃபோன்களால் அதிக ஆபத்து: CERT வெளியிட்ட இந்த எச்சரிக்கை செய்தியின்படி, சோனி, போஸ், மார்ஷல், JBL மற்றும் ஜாப்ரா போன்ற பிரபலமான பிராண்டுகளில் பயன்படுத்தப்படும் ஐரோஹா புளூடூத் சிப்செட்களில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்து வரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும், இல்லையேல், அவர்களுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் […]

வரதட்சணை கொடுமையால் கடந்த வாரம் திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. தற்போது இதே போன்றதொரு சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.. கன்னியாகுமரி மாவட்டம் திக்கனங்கோடு பகுதியை சேர்ந்த ஜெபிலா மேரி என்ற பெண்ணுக்கும் நிதின் ராஜுக்கும் 26 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.. 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.. பெண் வீட்டார் […]