நீரிழிவு நோய் பொதுவாக பெரியவர்களைப் பாதிக்கும் ஒரு நிலை என்றாலும், அது குழந்தைகளிலும் ஏற்படலாம். உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஜங்க் ஃபுட் ஆகியவை அதிகரித்து வருவதால், குழந்தைகளிலும் நீரிழிவு நோய் வரத் தொடங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 14% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு நீண்டகால நிலையாகும். இதில் கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யவோ […]

வார இறுதிநாள் விடுமுறையை முன்னிட்டு, ஜூலை 4, 5 தேதிகளில் தமிழகம் முழுவதும் 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு செல்லவும் ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஜூலை 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து […]

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவே, வருடத்தின் பாதி நாட்கள் நீருக்குள் மூழ்கி காட்சி தரும் அதிசய முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. “குறுக்குத்துறை முருகன் கோவில்” என அழைக்கப்படும் இத்தலம், திருச்செந்தூர் திருத்தலத்திற்கு நிகரான ஆன்மிகச் சிறப்பை பெற்றதாக பக்தர்கள் கருதுகின்றனர். பொதுவாக முருகன் கோவில்கள் மலை மேல் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளதென்பதும், குறுக்குத்துறை கோவில் மட்டும் ஆற்றின் நடுவே இருப்பதென்பதும் […]

ஈரான், உக்ரைன் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் வியாழக்கிழமை தொலைபேசியில் விவாதித்தனர். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இராஜதந்திர நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியில் உரையாடினர். இதன் போது, ​​உக்ரைனில் ரஷ்யா […]

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ரிவர் நார்த் பகுதியில் புதன்கிழமை இரவு (3 ஜூன் 2025) ஒரு உணவகத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி , இந்த சம்பவம் ஒரு பாடகரின் ஆல்ப வெளியீட்டு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவகத்திற்கு வெளியே நடந்தது . […]

ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, […]

ரூ. 200 கோடி பண மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யுமாறு பெர்னாண்டஸ் கோரியிருந்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், பணமோசடி தடுப்புச் சட்டம், 20202-ன் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பணமோசடி குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தையும் […]

அஜித்திற்கு கஞ்சா கொடுத்து போலீசார் அடித்தனர் என்று அவரின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. மேலும் மாவட்ட நீதிபதியும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். 2 நாட்களாக […]

கடந்த இரண்டு வாரங்களில் ஜப்பானில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன, இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 5-ம் தேதி நாட்டில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்திருந்த நிலையில், இந்த நிலநடுக்கங்கள் அச்சத்தை தூண்டி உள்ளன. சமீபத்தில் ஜப்பானின் அகுசேகி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அகுசேகி தீவில் உள்ள ஒரு […]