அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அறிவித்துள்ள நிலையில், முதலில் நீங்கள் நிறுத்துங்கள், பின்னர் போர் நிறுத்தம் குறித்து யோசிக்கலாம் என்று ஈரான் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பு குறித்து ஈரான் அல்லது இஸ்ரேலிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ […]

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின. ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது […]

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான திலீப் தோஷி மாரடைப்பால் காலமானார். இவருக்கு பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். திலீப் தோஷி நேற்று (திங்கள்) லண்டனில் காலமானார். அவருக்கு வயது 77. பல தசாப்தங்களாக லண்டனில் வசித்து வந்த திலீப் தோஷி, மாரடைப்பால் இறந்தார். அவரது மரணச் செய்தி கிரிக்கெட் […]

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திமுக, நாதக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதிமுக அடையாள அட்டை வழங்கி, தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல திமுகவை சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் […]

பேரீச்சம்பழம் அல்லது கஜூர் என்று பிரபலமாக அழைக்கப்படும் பேரீச்சம்பழம், உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், செரிமானம், இருதய ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு கூட சிறந்தது. மருத்துவர்கள் தினமும் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிட அறிவுறுத்தினாலும், அதனுடன் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. நீங்கள் பேரீச்சம்பழத்தை விதை அகற்றிய பின்பு அதன் உள்ளே உள்ளதை […]

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் ஜூலை 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் […]

வரும் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ஐடி விங் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கீழடி விவகாரத்தில் தமிழக நலன் முக்கியமில்லை, பிரதமர் மோடியின் ஆதரவு போதும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கருதுவது போன்று உடம்பில் துணி இல்லாமல் தூங்கும் வகையில், திமுக ஐடி விங் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது. இதைக் கண்டித்து அதிமுக முன்னாள் […]

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில், ரிஷப் பந்த் வரலாற்றில் தனது பெயரை பொறித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபூர்வமான சாதனையை அவர் நிகழ்த்தினார் . அதாவது போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து, செம்மையான படைப்பு மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். சிவப்பு பந்து (red-ball cricket) போட்டிகளில் இது அவரின் மிக முக்கியமான சாதனைகளில் […]

உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை எவ்வாறு சரிபார்ப்பது மற்றும் தேவைப்பட்டால் அவற்றைப் புகாரளிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. இந்தியாவில் மொபைல் பயனர்கள் தங்கள் பெயரில் போலி சிம் கார்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த போலி சிம் கார்டுகள், மோசடிகள் அல்லது சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். போலி சிம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொலைத்தொடர்புத் துறை (DoT) இப்போது உங்கள் பெயருடன் தொடர்புடைய அனைத்து […]

தங்கம் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள் தங்கத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். எந்தவொரு சிறிய விழாவிற்கும் தங்கம் வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை வாங்குவதற்காக நீண்ட காலமாக பணத்தை சேமித்து வைப்பவர்கள் கூட இருக்கிறார்கள். இந்து மதத்தில், தந்தேராஸ், குரு புஷ்ய யோகம், அக்ஷய திருதியை போன்ற நாட்களில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தங்கம் வாங்கும் பாரம்பரியம் பழமையானது. மங்களகரமான நாட்களில் தங்கம் வாங்க […]