விடுபட்ட குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர்; மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், செவிலியர் கல்லுாரிகள் என அனைத்து கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு முடிப்பவர்களுக்கு தேவையான உயர்கல்வி கிடைக்கிறது. அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு […]

தமிழகத்தில் தற்போது டிஜிட்டல் மின் மீட்டர்கள் மூலம் மின்சார பயன்பாடு கணக்கிடப்படுகிறது. இவற்றை ஸ்மார்ட் மீட்டராக மாற்ற ரூ.19,235 கோடியில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான டெண்டர் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஜூலை 31-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 3 கோடி மின்நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களின் மின்சார பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஸ்மார்ட் மீட்டர்கள் […]

சரியான நேரத்தில் தலையிடாவிட்டால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போர் வெடித்திருக்கும் என்று கூறினார். வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு இரு நாடுகளையும் மிரட்டியதாகவும், இதனால் போர் தவிர்க்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஸ்காட்லாந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் உட்பட உலகில் ஆறு பெரிய போர்களை நிறுத்த தாம் பாடுபட்டதாக டிரம்ப் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள் என்பதால் அவற்றை “மிகப்பெரிய ஹாட்ஸ்பாட்” என்று […]

பூமியிலிருந்து 35 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழ உதவும் புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். L 98-59 நட்சத்திர அமைப்பில் உள்ள நான்கு கோள்களும் தங்கள் தாய் நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாக சுற்றி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நிலவுகளுக்கும் குறைவான பரிமாணங்களில் இருந்து பூமியுடன் ஒத்தவையாக இருக்கக்கூடிய அளவுகளிலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது உயிர் வாழும் வாய்ப்பு உள்ள இடங்களை ஆராய்வதில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. இதைத் […]

தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு. நகர்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் வணிக நிறுவனங்களின் குடோன்களுக்கு 700 முதல் 10 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் 500 முதல் 7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் வகைபடுத்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும், […]

கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது என்று நயினார் நாகேந்திர விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களிடம், “சாலை வசதி செய்துதராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?” […]