மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) அமைப்புகளில் உள்ள விஞ்ஞானி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 148 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விஞ்ஞானி – பி (Scientist ‘B’) 127, விஞ்ஞானி/ இன்ஜினியர்-பி (Scientist/Engineer ‘B’) 9, விஞ்ஞானி- பி (Scientist ‘B’) 12 என மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி […]

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று, பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை கொடுத்தது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்திய பிறகும், முழு ஊரடங்கு பிறக்கப்பட்டது. இதனால், கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாடு முழுவதும் 5,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு […]

இரத்த சர்க்கரை அளவுகள் அமைதியாக உயர்கின்றன. இந்த அளவுகள் இயல்பை விட உயர்ந்தால், அவை சோர்வு மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், நம்பிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால், சில குறிப்பிட்ட உணவுகளை தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த அளவுகளை சமநிலைப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நீரிழிவு நோய்க்கு எதிரான பாதுகாப்பாகவும் மாறும். இந்த உணவுகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எதிர்காலத்தில் நீரிழிவு நோய் […]

உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை குறைக்க உதவும் சில டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.. தற்போது அனைவரின் வீடுகளிலும் மின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின் கட்டணமும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.. அதுவும் இந்த கோடைகாலத்தில், ஏசி, மின்விசிறிகள் மற்றும் சமையலறை உபகரணங்களால் மின் கட்டணத்திற்கான செலவு மேலும் அதிகமாகிறது. இத்தகைய சூழலில் மின்சாரத்தை சேமிக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் நாம் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் […]

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மக்கள் மனதில் தங்களுக்க்கான ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றனர். அந்த வகையில், நடிகர் கிருஷ்ணாவும் கற்றது களவு, கழுகு போன்ற படங்களில் மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும், கிருஷ்ணாவின் கழுகு திரைப்படம் பலருடைய பாராட்டையும், விருதுகளை குவித்தது. இந்நிலையில் தான், கிருஷ்ணா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. […]

திரைப்பட நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அமிதாப் பச்சன் முதல் ஆலியா பட், தீபிகா படுகோன் வரை, பெரும்பாலான பிரபலங்களின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது. அந்த வரிசையில் பாலிவுட்டின் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவர் சமீபத்தில் தனது பள்ளி பருவ புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிறது. அவர் தனது தந்தையின் தொழில் காரணமாக 13 வெவ்வேறு பள்ளிகளில் தனது படிப்பை […]

Pm Modi Fitness Secret : 74 வயதிலும் நரேந்திர மோடியைப் போல ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? அவரின் ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து தற்போது பார்க்கலாம்.. 74 வயதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் உடற்தகுதி மற்றும் ஆற்றலைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். தொடர்ந்து வேலை செய்தாலும் சரி, தொடர்ச்சியான சர்வதேச சுற்றுப்பயணங்களின் பரபரப்பான அட்டவணையில் இருந்தாலும் சரி, அவர் ஒருபோதும் சோர்வாக காணப்பட்டதே இல்லை.. அதிகாலையில் யோகா செய்வது […]

கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு […]

தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார். நாட்டில் தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியது. நகைக்கடன் வாங்குவோர், நகைக்கான உரிமையாளர் நான் என்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெறுவது அவசியம் எனவும் இனி 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் தான் கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. மேலும், […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் களத்தையே பரபரப்பாக்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் புதிதாக களம் காணவுள்ள விஜய்யின் தவெகவும் மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளில் […]