உலகளாவிய பொருளாதாரச் சூழல் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையிலும், இந்தியாவின் உள்நாட்டு தேவையும் சேவை துறையின் வளர்ச்சியும் வலுவாக இருப்பதால், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை சர்வதேச நாணய நிதியம் (IMF) உயர்த்தியுள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 6.4 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக ஐஎம்எஃப் தற்போது கணித்துள்ளது. முன்னதாக உலக வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டும் 2026-27 நிதியாண்டில் […]
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடையை முழுநேரக் கடையாக மாற்றி வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை மற்றும் நாள் ஒன்றுக்கு 347 கோடி ரூபாய் வட்டி செலுத்தும் நிலை உள்ள சூழலிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், […]
தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் ‘சிஜேபி’ (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, டெல்லியில் […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (SIR) உட்பட பல்வேறு விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக குற்றம்சாட்டி, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்திய எதிர்க்கட்சிகள், தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் […]
தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான புதிய திருத்திய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடற்கல்வி மற்றும் இணையதள கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் இந்த அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காலை 9:30 மணி முதல் மாலை 4:10 மணி வரை பள்ளிகள் செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய கால அட்டவணையின்படி, வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) செப்டம்பர் 2026 மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களை அறிவித்துள்ளது. இதில் இந்திய ஆடவர் அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா ஆகியோர் செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக சுப்மன் கில்லிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற […]
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா மற்றும் பிரபல நடிகை ஆகிருதி அகர்வால் ஆகியோர், தங்களது நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த மார்ச் 2026 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இந்த ஜோடி, எதிர்கால இலக்குகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் பிரிவதாக அறிவித்திருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பதிவில், தமக்கு நெருக்கமானவர்களின் கருத்துக்களால் தான் தவறாக […]
இதயப் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே மாரடைப்பு வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இதயம் ரத்தத்தைச் செலுத்துவதை நிறுத்தும் நிலையும் ஏற்படலாம். இதற்கு திடீர் இதய நிறுத்தம் (Sudden Cardiac Arrest) என்று பெயர். இந்த நிலையில் மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். உடனடியாகச் சிகிச்சை அளிக்காவிட்டால், சில நிமிடங்களிலேயே உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இதய நோய் இருப்பது […]
நவராத்திரி விரதக் காலத்தில் சாப்பிடப்படும் உணவுகளில் ஜவ்வரிசிக்கு முக்கிய இடம் உண்டு. ஜவ்வரிசி கிச்சடி, வடை, பாயசம் எனப் பல வகையான உணவுகளை இதைக் கொண்டு தயாரிக்கலாம். விரதத்தின்போது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் உணவாக இது இருந்தாலும், தினமும் அதிக அளவில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றதா என்ற கேள்வி எழுகிறது. ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கிழங்கைச் சுத்தம் செய்து, அரைத்து, அதிலிருந்து மாவுச்சத்தைப் பிரித்தெடுத்து சிறிய உருண்டைகளாக […]
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட நாட்டின் 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பல்வேறு மாநில ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்களும் பொறுப்பேற்க உள்ளனர். அதன்படி, தற்போது கேரள மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் மாநில ஆளுநராக உள்ள ஓம் பிரகாஷ் […]

