தமிழக அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டு இருந்தது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.7000 முதல் அதிகபட்சமாக […]

2021-22ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் இந்த 2022-23 கல்வியாண்டில் உயர்கல்வி படிக்காமல் இருந்தால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் 79,762 மாணவர்கள் கலந்துக் கொண்டு உயர்கல்வி ஆலோசனை பெற்றனர். அவர்களில் 8,249 பேர் இந்தாண்டு உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1,531 […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ மகளிர்‌ பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கம்‌ அமைத்திட தாட்கோ மூலம்‌ மானியம்‌ வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் : ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர்‌ மகளிர்‌ மற்றும்‌ ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 இலட்சம்‌ […]

மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஈசிஆரில் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மாணவி சத்யா இறந்த செய்தி கேட்டு அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது, இது […]

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், நிரப்பப்படவுள்ள மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரம்… நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணியின் பெயர்: Sub-Inspector of Fisheries  காலி […]

வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை […]

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், […]

விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் 12-வது தவணை நிதி தீபாவளிக்கு முன்னதாகவே மத்திய அரசால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. PM-KISAN திட்டத்தின் படி அரசு வழங்கும் ரூ.6,000 நிதியுதவியானது, இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் 4 மாதங்களுக்கு ஒருமுறை, தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் […]

இயந்திரமயமாகி விட்ட இந்த உலகில் பணத்தைவிட நேர்மைதான் முக்கியம் என வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற நெட்டிசன் ஒருவரின் பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’– இது வள்ளுவர் வாக்கு. ஆனால், பலருக்கு உதவி கேட்கும்போது இருக்கும் பணிவு, பின்னாளில் மறந்து விடுகிறது. உதவி தேவைப்படும் காலத்தில், உதவி செய்தவரை கடவுளாகவே நினைத்தாலும்கூட, காலங்கள் செல்லச் செல்ல காற்றில் அவர் செய்த உதவியும் […]

71 வயது முதியவருடன் நெருக்கமாகப் பழகி ரூ. 3 லட்சம் ஏமாற்றிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவரது ஆண் நண்பர்கள் மூலம் 71 வயது முதியவர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து முதியவரும் ராஜியும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இதையடுத்து, இருவரும் உல்லாசமாக இருந்ததை ராஜி, முதியவருக்குத் தெரியாமல் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். பின்னர், அந்த […]