இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பெரும்பாலானோர் தினமும் பிரா அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், சிலருக்கு இது அசெளகரியமாக, சில சமயங்களில் மூச்சுத்திணறல் கூட ஏற்படும். முக்கியமாக, இறுக்கமாக உள்ள பிராக்கள் வலியும், தோலில் எரிச்சலும், தடிமனும் ஏற்படுத்தும். பொதுவாக பெண்கள் பயன்படுத்தும் பிராக்களில் பலவகைகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் இறுக்கமாகவே வடிவமைக்கப்பட்டிருப்பதால், சிலருக்கு உடலுக்கு ஏற்ற போதுமான சுதந்திரம் கிடைக்காமல் போகிறது. குறிப்பாக, உடலமைப்பிற்கு பொருந்தாத அல்லது அளவுக்கு மிஞ்சிய […]

இந்தியா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாகும். இது மிகவும் சமநிலையான சக்தி மற்றும் ராஜதந்திர நடத்தை கொண்ட நாடாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த விரும்புகின்றன. இந்தியாவும் இதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில், பியூ ரிசர்ச் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, அதில் அவர்கள் உலகின் 24 நாடுகளிடமிருந்து இந்தியாவைப் பற்றிய கருத்தைக் கேட்டனர். கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவைப் பற்றிய நேர்மறை மற்றும் […]

ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம், அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், அங்குள்ள பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 38). இருவரும் பவானி காவல் நிலைய குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு 16 வயது மகளும், 11 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம், நாகராஜ் […]

பின்தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட அல்லது தடை உத்தரவுகளைப் பெற்ற பெண்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 41% அதிகரிக்கிறது என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. “சர்குலேஷன்” இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, பின்தொடர்வது பெண்களின் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கக்கூடும், மேலும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். பின் தொடர்தல் என்பது மனிதர்களுக்கு இடையிலான வன்முறையின் (interpersonal violence) மிகவும் […]

எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி நாளை மாலை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக உயர்கல்வித் […]

நம் அன்றாட உணவில் மீன் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது வெறும் சுவைக்காக மட்டுமல்ல, உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. மூளை நன்றாக வேலை செய்ய, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நரம்புகள் சரியாக செயல்பட, மீன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மீனில் உள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மன அழுத்தம் […]

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி சந்தித்து இது குறித்து பேசினார். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் […]