முழங்கையைச் சுற்றியுள்ள சருமம் கருமையாக மாறுவது பலருக்கும் சாதாரணமான சருமப் பிரச்சனையாகவே தெரியும். தூசி, அழுக்கு, வெயில் அல்லது அடிக்கடி உராய்வதால் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து ஸ்க்ரப் அல்லது கிரீம் பயன்படுத்தி கருமையை குறைக்க முயற்சி செய்வதும் வழக்கம். ஆனால், சில நேரங்களில் முழங்கையில் ஏற்படும் இந்த மாற்றம் உடலில் இருக்கும் சில பிரச்சனைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். முழங்கைப் பகுதியில் சருமம் தொடர்ந்து கருமையாகி, அதே நேரத்தில் தடிமனாகவும் மாறினால் […]

திருமணம் என்றாலே கணவன் – மனைவி இருவரும் ஒரே கூரையின் கீழ் இணைந்து வாழ்வதுதான் காலம்காலமாக இருந்து வரும் சமூக நடைமுறை. ஆனால், அந்தப் பாரம்பரிய கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் ஒரு புதிய வாழ்க்கை முறை தற்போது சர்வதேச அளவில் இளம் தலைமுறையினரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. அதுதான் ‘வீக்கெண்ட் மேரேஜ்’ (Weekend Marriage) எனப்படும் வார இறுதித் திருமண முறை. இன்றைய நவீன காலகட்டத்தில் Gen Z மற்றும் […]

பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பரவல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் தொற்றை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. டெங்கு வைரஸ் உடலுக்குள் புகுந்த 3 முதல் 14 நாட்களுக்குள் அதன் […]

அசைவ உணவுப் பிரியர்களின் அன்றாட மெனுவில் சிக்கனும் மீனும் எப்போதும் முதலிடம் பிடிப்பவை. ஆனால், இவை இரண்டில் உடலுக்கு அதிக ஆரோக்கிய பலன்களை வழங்குவது எது என்ற விவாதம் நெடுங்காலமாகவே தொடர்ந்து வருகிறது. ஊட்டச்சத்து மதிப்பீடுகளின்படி, இந்த இரண்டு உணவுகளுமே தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிக்கன் உடலுக்குத் தேவையான புரதச்சத்தை மிக எளிதாக வழங்கும் சிறந்த உணவாக விளங்குகிறது. இதிலுள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் […]

இந்து சாஸ்திர மரபில் பக்தி நெறியும் ஆன்மீகச் சிந்தனைகளும் மேலோங்கும் உன்னதமான மாதமாக புரட்டாசி விளங்குகிறது. எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் பேரருளைப் பெற உகந்த இந்த மாதத்தில், சனிக்கிழமை விரதம், ஆலய வழிபாடு மற்றும் அன்னதானம் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும் என்பது நம்பிக்கை. ஜோதிடக் கணிப்புகளின்படி, இந்த புரட்டாசி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. குறிப்பாக, சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான தனவரவும் […]

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை, வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி மதுரையில் முதல்வர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார். முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதியே இத்திட்டம் தொடங்கப்படுவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், முதல்வர் விஜயின் வெளிநாட்டுப் பயணம் […]

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளில் உள்ள பயனாளிகளின் விவரங்களை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி கைவிரல் ரேகை பதிவு (eKYC) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் முன்னுரிமை மற்றும் […]

சிவகங்கை அருகே காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தங்களது சொகுசு காரில் பழலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு வந்துள்ளனர். அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் காரை நிறுத்திவிட்டு, அதன் அருகே அமர்ந்து இருவரும் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு விரைந்து வந்த மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று, திடீரென அந்த இளைஞர்களை நோக்கி ஆக்ரோஷமாகப் […]

கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நீடிக்கிறது. அதேபோல், தெற்கு ஆந்திரக் கடலோரம் மற்றும் ராயலசீமா வான்வெளியில் 1.5 […]

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்குத் தாவுவதும், அதனால் மக்களின் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதும் வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் தங்களது […]