சித்தர்கள் தவமியற்றும் பூமி, மலையை வலம் வந்து சிவனை வழிபடும் தலம் என்றதுமே பக்தர்கள் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்தான். ஆனால், அதே ஆன்மீகப் பெருமைகளுடன் சித்தர்கள் இன்றும் சூட்சும வடிவில் வாழ்ந்து ஈசனை வழிபடுவதாகவும், பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் கிரிவலம் வருவதாகவும் போற்றப்படும் மற்றொரு புண்ணியத் தலம் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணேஸ்வரர் மலைக்கோவில் ஆகும். எவர் ஒருவருக்கு ஈசனின் அருள் பரிபூரணமாக […]
முன்னோர்களின் நினைவாக திதி மற்றும் தர்ப்பணம் செய்வதற்கு மிகவும் புண்ணிய நாளாகக் கருதப்படும் புரட்டாசி மகாளய அமாவாசை, வரும் 2026 அக்டோபர் 10 சனிக்கிழமையன்று வருகிறது. மிக அரிதாக, மகாளய அமாவாசையும் சனி பகவானுக்குரிய சனி அமாவாசையும் (சர்வ பித்ரு அமாவாசை) ஒரே நாளில் இணைந்து வருவது கூடுதல் ஆன்மீக மகத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாளில் அதிகாலையிலேயே புனித நீராடி சனி பகவானை வழிபடுவதோடு, முன்னோர்களை மனதார நினைத்து கருப்பு எள், […]
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்த முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்களை தில்லி காவல்துறை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது. எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி நேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று (அக். […]
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. வேட்புமனுவில் முழுமையான சொத்து விவரங்கள் முறையாகத் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட இந்த வழக்குகளை ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிக்கக் கோரி, விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு […]
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், விற்பனை உதவியாளர், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 நிலையிலான 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தேர்வர்கள் வரும் நவம்பர் 5-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் […]
ரிசர்வ் வங்கி, தனது முக்கிய வட்டி விகிதமான ரெப்போ ரேட்டை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வட்டி விகித உயர்வு எதையும் செய்யாமல் இருந்த ஆர்பிஐ, தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கூடிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட பணவளக் கொள்கைக் குழு (MPC) ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் வட்டி […]
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக இருந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் அக்டோபர் 4 அன்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேர்வுக் குழுவில் இணைந்த அவர், 3 ஆண்டுகளுக்கும் மேலாக அக்குழுவை சிறப்பாக வழிநடத்தினார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது முன்னாள் அணித் தோழருக்கு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 2024 […]
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உயர்கல்வி நிறுவனமான கொலராடோ டென்வர் பல்கலைக்கழகம் (CU Denver), இந்தியாவின் ஹைதராபாத் நகரில் தனது புதிய வெளிநாட்டு வளாகத்தை அமைக்கவுள்ளது. இந்தியாவில் பட்டங்களை வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ள முதல் அமெரிக்கப் பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் நுழையும் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான விருப்பப் பட்டயத்தை (Letter of Intent – LoI) இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் […]
இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இருப்பினும், அவற்றின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பதை உணர்த்தும் பல சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில், கனடாவில் 16 வயது சிறுவன் ஒருவன் ‘கிளாட் ஏஐ’ (Claude AI) வழங்கிய வழிகாட்டுதலை நம்பி, ஆபத்தான மலைப்பகுதியில் சிக்கிக் கொண்டு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? […]
உத்தரப் பிரதேச மாநிலம் விரிந்தாவனில் உள்ள குடியிருப்பு குருகுலத்தில் நிலத்தடி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 5 மாணவர்களில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நச்சு வாயு தாக்கியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரா மாவட்டம் விரிந்தாவனின் சைதன்ய விஹார் பகுதியில் இந்த குருகுலம் […]

