ஸ்ரீபெரும்புதூரில் பிரியாணி கடை நடத்தி வந்த அரிகிருஷ்ணன் என்பவரை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேவலூர் குப்பத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன், பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவி பவானியும் (39) பிரியாணி கடையில் இருந்து வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே கடையில் வேலை செய்த மதன்குமார் (29) என்பவருடன் பவானிக்கு நெருக்கம் […]
பெண் தொழில்முனைவோருக்கான உத்யம் சகி தளத்தில் 4,535 பேர் பதிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு நிதி திட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் மற்றும் ஆதரவு நிறுவனங்கள் குறித்து தகவல்களை வழங்கவும், பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கவும் https://udyamsakhi.com/ என்ற தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் பெண் தொழில்முனைவோர்கள் தங்களுடைய வர்த்தகங்களைத் தொடங்கவும், கட்டமைக்கவும், […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வந்தது. வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவில் சுமார் […]
சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 20.08.2025 அன்று வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 22.08.2025 முதல் 12.09.2025 வரை பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினர், மாற்றுதிறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளது. பள்ளி பிரிவிற்கு 01.01.2007 […]
மகாபாரதம் வெறும் போர்க் கதையோ அல்லது அரசியல் கதை மட்டுமல்ல, தர்மம், ஒழுக்கம் மற்றும் மனித விழுமியங்கள் பற்றிய பாடங்களின் புதையலாகும். அத்தகைய ஒரு ஊக்கமளிக்கும் கதை தர்மர் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரரைப் பற்றியது, அவர் கருணை மற்றும் கொள்கைகளின் உண்மையான அர்த்தத்தைக் காட்டினார். வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்கைக் கூட அறமின்றி அடையக்கூடாது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. பாண்டவர்களின் கடைசி பயணம் மகாபாரதப் போருக்குப் பிறகு, பாண்டவர்களின் காலம் […]
“வாழ்க்கை என்பது இனிமையான உறவுகளால் நிரம்பியதாக இருக்க வேண்டும்” என்று நாம் நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உறவுகள் என்பது அன்பு, பாசம் தரும் பொழுதே சொர்க்கமாகும். ஆனால் அதே உறவுகள் பொறாமை, ஈர்ப்பு, போட்டி, பேராசை ஆகியவையின் மூலம் நம் மனதையும், வாழ்க்கையையும் சிதைக்கும் நிலைக்கும் எடுத்துச் சென்றுவிடுவார்கள். இந்த நேரத்தில், சாணக்கியர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகள் இன்று நம் சமூகத்தில் மேலும் பொருத்தமாக உள்ளன. உறவுகளுக்குள் மறைந்திருக்கும் […]
இந்தியாவில் ஹனுமான் பழம் என்று அழைக்கப்படும் சோர்சாப், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பலர் விரும்பும் ஒரு வெப்பமண்டல பழமாகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது மற்றும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கேள்வி என்னவென்றால், இதை ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்வது சரியானதா? குறிப்பாக சிலர் இது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு உதவும் என்று கூறுகின்றனர். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், சோர்சாப் அல்லது அதன் தயாரிப்புகள் […]
“உங்கள் குலதெய்வம் எது?”.. இந்த கேள்வி பலரும் கேட்டு பார்த்திருப்போம். ஆனால், அந்தக் கேள்விக்கு சிலர் மட்டும் உறுதியாக பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலருக்கு தங்கள் குலதெய்வம் எது என்றே தெரியாது. இன்றைய நகரமயமான வாழ்க்கையில், நம் முன்னோர் வழிபட்ட தெய்வங்களைப் பற்றிய அறிவும், அதற்குள் பதிந்த கலாசாரப் பின்னணியும் நம்மிடமிருந்து நீங்கி வரும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே, குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அதை எப்படி கண்டுபிடிப்பது […]
கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் எப்போதும் விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தில் வயது வித்தியாசம் குறித்து குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை என்றாலும், திருமணச் சட்டம், 1955, திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்தால், அது சட்டவிரோதமானது. பாரம்பரியமாக, நமது சமூகத்தில், ஒரு கணவன் தனது மனைவியை […]
2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி […]