மதுக் கடைகளில் இருந்து மட்டும் 22,000 கோடி ரூபாய்முறைகேடு செய்த ஊழல் பணம் மேலிடத்துக்கு சென்றுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் திருவண்ணாமலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி; தமிழகத்தில 6000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் […]

கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் அன்மோல் ஜெயின் (580 புள்ளி), ஆதித்யா மல்ரா (579), சவுரப் சவுத்தரி (576) அடங்கிய இந்திய அணி, 1735 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. ஆண்கள் தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அன்மோல் ஜெயின், 580 புள்ளிகளுடன் 7 வது […]

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து, ஊதிய உயர்வு, கொரோனா கால ஊக்கத் தொகை வழங்கல், தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். மாநகராட்சி சார்பில் மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் […]

இந்தியா முழுவதும் ஜியோ பயனர்கள் நெட்வொர்க் பிரச்சனைகளைப் புகாரளித்து வருகின்றன.. அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தவோ முடியவில்லை என்றும் பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.. செயலிழப்பு கண்காணிப்பு தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, புதன்கிழமை ஏராளமான ஜியோ பயனர்கள் தங்கள் சேவைகளில் சிக்கல்களைப் புகாரளித்தனர், இது நாடு முழுவதிலுமிருந்து புகார்கள் அதிகரித்தன. பெரும்பாலான ஜியோ பயனர்கள் மொபைல் இணையத்தில் (54 சதவீதம்) சிக்கல்களைப் புகாரளித்ததாக டவுன்டெக்டர் தளம் […]

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. நேற்று முன் தினம் அமைச்சர், ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது. மேலும் ஐ.பெரியசாமியின் மகன், மகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும், எம்எல்ஏ குடியிருப்பில் அவரது மகனின் அறை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் வரை நீடித்தது. […]

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இங்கு படகு போக்குவரத்தை தான் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள சொஹொடா மாகாணம், கடா கிராமத்தை சேர்ந்த 50 பேர் சந்தைக்காக படகில் பயணித்த போது படகு கவிழ்ந்து பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது. கடா கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்த மாநிலத்தின் பிரபலமான உணவுப் பொருட்கள் சந்தையான கோரோனியோ சந்தைக்குச் நேற்று மதியம் படகு மூலம் சென்று கொண்டிருந்தனர். […]

ஹைப்ரிட் ஸ்கூட்டர் என்பது பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்சார மோட்டார் இரண்டையும் கொண்ட இரு சக்கர வாகன வகையாகும். இது எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் சக்தியை வழங்குகிறது, அதே நேரத்தில் மின்சார மோட்டார் குறைந்த வேகத்தில் உதவுகிறது. இது எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது. பேட்டரி பொதுவாக மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் மூலம் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் குறைந்த உமிழ்வை வெளியிடுகின்றன. […]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.. உக்ரைன் போர் தொடர்பாக அலாஸ்காவில் அதிபர் டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் மோடியிடம் பகிர்ந்து கொண்டார்.. அதிபர் புதினுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், ராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். […]

2025 முடிவடைய இன்னும் 4மாதங்களே உள்ளன.. இதனிடையே சில கிரக மாற்றங்கள்.. சில ராசிகளுக்கு சுப யோகங்களைக் கொண்டுவரும். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிரக இயக்கங்கள் காரணமாக, 5 ராசிக்காரர்களுக்கு நிறைய பணம் மற்றும் புகழைப் பெற வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்… 2025 ஆம் ஆண்டு இறுதி வரை மீதமுள்ள நேரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். ஊழியர்களுக்கு […]