தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ.-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் வேட்பாளர்களை அறிவித்துத் தீவிர […]

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருந்து போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தான் நோக்கி சுமார் 240 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று ஜாவா கடலில் திடீரெனத் தொடர்பை இழந்தது. கப்பலையும் அதில் உள்ளவர்களையும் கண்டறியும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுரபாயா நகரத்திலிருந்து பஞ்ஜர்மசின் (Banjarmasin) நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பல், ஜாவா கடற்பகுதியில் பயணம் செய்தபோது திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றது. […]

9/11 தாக்குதலுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் இந்தியாவின் மீதும் தாக்குதல் நடத்த அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் திட்டமிட்டிருந்ததாக மத்திய உளவுத்துறை வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பின் லேடன் தொடர்பான 70-க்கும் மேற்பட்ட அதிபர் உளவுத்துறை அறிக்கைகள் (Presidential Daily Briefs) மற்றும் 100 பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 28, 1998 அன்று வெளியிடப்பட்ட அதிபர் உளவுத்துறை அறிக்கையின்படி, எகிப்து, […]

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான இரவு விருந்தில், இந்தியாவின் பாரம்பரிய மணம் வீசும் சிறுதானியங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நாவில் கரையும் சைவ உணவுகள் பரிமாறப்பட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளன. பாரம்பரிய இந்தியச் சுவைகளையும் நவீன உணவு வகைகளின் நேர்த்தியையும் இணைத்து வடிவமைக்கப்பட்ட இந்த மெனுவில், தொடக்க உணவாக ‘கண்ட்வி மில்-ஃபூய்’ (Khandvi Mille-Feuille) மற்றும் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நான்கு வயது வரை வாழ்ந்த க்யூவீன்ஸ் (Queens) பகுதியில் உள்ள குழந்தைப் பருவ வீடு, பெரும் மாற்றங்களுக்குப் பிறகு சுமார் 1.93 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய்) புதிய உரிமையாளரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ட்ரம்பின் தந்தையும் டெவலப்பருமான ஃப்ரெட் ட்ரம்ப் என்பவரால் ஜமைக்கா எஸ்டேட்ஸ் பகுதியில் கடந்த 1940 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ‘டியூடோர்’ பாணி […]

அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் (அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல்) வழக்கத்தை விட அதிக வலுவுடன் மூன்று சக்திவாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) எச்சரித்துள்ளது. செயற்கைக்கோள் மற்றும் வானிலை ஆய்வுத் தரவுகளின்படி, கடந்த 44 ஆண்டுகளின் சராசரியைக் காட்டிலும் இந்த ஆண்டு புயல்களின் ஆற்றல் மற்றும் தீவிரம் சுமார் 83 சதவீதம் வரை […]

பிரிட்டனில் உள்ள சில்வர் ஸ்டோன் மைதானத்தில், நடைபெறும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் அணி 38வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சுற்றில் (Silverstone Racing Circuit), தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித்குமாரும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டது இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. 34 ஆண்டுகால சினிமா பயணம் மற்றும் நீண்டகால திரையுலகப் போட்டி ஆகியவற்றைத் தாண்டி, […]

இந்து தர்மத்தில் எந்தவொரு மங்கல காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முன்னிறுத்தி வழிபடுவது தொன்றுதொட்டு வரும் மரபாகும். விநாயகரை எந்த ரூபத்தில் வழிபட்டாலும் நற்பலன்கள் கிட்டும் என்றாலும், ஜோதிட ரீதியாக 12 ராசிக்காரர்களும் தங்களுக்குரிய குறிப்பிட்ட கணபதி வடிவங்களையும், அதற்கான பிரத்யேக மூல மந்திரங்களையும் ஜெபித்து வழிபடுவது இரட்டிப்புப் பலன்களைத் தரும் என ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. மேஷ ராசியினர் சம்மந்த விநாயகரையும், ரிஷப ராசியினர் […]

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்கள் மற்றும் கர்மவினைகளில் இருந்து விடுபட விநாயகர் சதுர்த்தி மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத வகையில், விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட புதிய சிலையை வீட்டில் வைத்து பூஜித்து, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. களிமண் தண்ணீரில் கரைவது போல, நமது பாவங்களும் கர்மவினைகளும் கரைய வேண்டும் என்ற […]

ஒருவரது வீட்டில் மகாலட்சுமியின் அம்சமான தங்கம் தடையின்றி சேர்ந்து பெருகுவதற்கு, நமது முன்னோர்கள் பல்வேறு ஆன்மீக மற்றும் ஜோதிட வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். பொதுவாக அனைவரும் அட்சய திருதியை அன்று மட்டுமே தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் நிலையில், மற்ற நாட்களில் தங்கம் வாங்க விரும்புபவர்கள் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் அதிர்ஷ்டமும் தங்கச் சேர்க்கையும் பன்மடங்கு பெருகும். புதிதாக வாங்கிய […]