ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட முக்கியச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. இதில் ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் உள்ள நேரடிக் கைது அதிகாரங்களைப் பறித்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகே கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சட்டத்தில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 7 அன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் உயர்மட்டக் கூட்டத்தில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட […]
பண்டிகைக் காலத்தையோ அல்லது புத்தாண்டு விடுமுறையையோ முன்னிட்டு சொந்த ஊர்களுக்கோ அல்லது சுற்றுலா தளங்களுக்கோ விமானத்தில் செல்லத் திட்டமிட்டிருந்தால், உடனடியாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது நல்லது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய உள்நாட்டு விமான வழித்தடங்களில் கட்டணம் கடந்த ஆண்டை விடப் பெருமளவில் உயர்ந்துள்ளது. டெல்லி – ஹைதராபாத் வழித்தடத்தில் விமானக் கட்டணம் 68% வரையிலும், மும்பை – கொல்கத்தா வழித்தடத்தில் 51% வரையிலும் அதிகரித்துள்ளது. பண்டிகை மற்றும் […]
பல கோயில்களை ஒரே பயணத்தில் தரிசிக்க வேண்டும் என்ற பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஆன்மிக சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் டெல்டா பகுதியில் உள்ள 14 முக்கிய வைணவ திவ்ய தேசங்களுக்கு ஒரே நாளில் சென்று வர முடியும். வார இறுதி நாட்களில் மட்டும் இயக்கப்படும் இந்தப் பயணத்துக்காக 53 இருக்கைகள் கொண்ட ஏசி சொகுசுப் பேருந்து பயன்படுத்தப்படுகிறது. […]
அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களை தவெக தரப்பினர் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, இதற்கு மக்கள் தான் சரியான பதிலை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து நியாயம் கேட்பது போல் தனது எக்ஸ் பதிவில் அவர் கருத்துகளை பதிவு செய்துள்ளார். கட்சியின் வெற்றிக்காக பல ஆண்டுகளாக உழைத்த நிர்வாகிகளையும், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களையும் […]
ரேஷன் கடைகளுக்கான துவரம்பருப்பு கொள்முதலில் விலை குறைந்ததன் மூலம், மூன்று மாதங்களில் அரசுக்கு ரூ.187.56 கோடி அளவுக்கு செலவு மிச்சமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது ஒரு கிலோவுக்கு ரூ.31-க்கும் அதிகமான வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 60,000 மெட்ரிக் டன் துவரம்பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட திறந்தநிலை டெண்டரில், ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.77.89 என்ற விலையில் […]
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்யக்கோரியும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும் என இடைக்கால உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோஹனா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் […]
இந்தியாவின் ‘சிலிகான் வேலி’ என்றழைக்கப்படும் பெங்களூரு நகரம், மென்பொருள் வல்லுநர்களுக்கும் அதிக சம்பளம் தரும் ஐடி நிறுவனங்களுக்கும் பெயர்பெற்றது. ஆனால், அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பணிபுரியும் இளைஞர்களுக்குப் பெரும் கவலையாக மாறியுள்ளது. இந்நிலையில், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ‘ப்ராடக்ட் மேனேஜராக’ பணிபுரியும் சிவாங்க் கோயல் (Shivank Goel) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மாதம் […]
கோயம்பேட்டில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், போலீசாரிடம் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து சாமியார் வேடத்தில் திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பூவரசி (28), கணவரைப் பிரிந்து தனது 9 வயது மகன் தருணுடன் வசித்து வந்தார். அருகில் உள்ள பள்ளியில் […]
வேலையை விட்டுவிட்டு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் இடைவெளி எடுத்தாலும் EPF கணக்கில் இருக்கும் பணத்துக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கலாம். ஆனால் அந்த வேலை இடைவெளியில் சேரும் வட்டிக்கு வரி விதிக்கப்படுமா என்பது பலருக்கும் தெரியாத முக்கிய விஷயமாக உள்ளது. குறிப்பாக, ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவிட்டு வேலையை விட்டு வெளியேறியவர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டால் EPF தொடர்பான அனைத்து வட்டிக்கும் […]
சமையலறை பட்ஜெட்டை பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது காய்கறிகளின் விலை. சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கிலோ ரூ.60 வரை சென்றுள்ளது. இதேபோல் பெரிய வெங்காயமும் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதால், அன்றாட காய்கறி வாங்கும் குடும்பங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து கணிசமாக சரிந்துள்ளது. தினசரி சுமார் 55 லாரிகளில் வந்த தக்காளி, தற்போது 35 லாரிகளாக குறைந்துள்ளது. சந்தைக்கு வரும் […]

