fbpx

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையின் […]

கேரள மாநிலத்தைச் சார்ந்த சௌதாமினி என்பவர் கடந்த 2014 ஆம் வருடம் நவம்பர் மாதம் போர்ட் கிளாசிக் டீசல் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை 8,94,876 ரூபாய் என்று சொல்லப்படுகிறது. கைரலி போர்ட் என்ற ஷோரூமில் இந்த கார் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காரின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரங்களில் ஒரு லிட்டருக்கு 32 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இதனை நம்பித்தான் சௌதாமினி இந்த காரை […]

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தினையும், மின்கட்டண உயர்வினையும் வாபஸ் பெறாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்தை நடத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதிலிருந்து மின் கட்டண உயர்வுக்குத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆதார் இணைப்பு மூலம் எந்த விதமானப் பாதிப்பும் இல்லை என்று அரசு தெரிவித்தாலும், […]

சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு, அரசுத்துறை ஆவணங்களை போலியாக தயார் செய்ததாகவும், நிலம் குறித்த ஆவணங்களை பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் வட்டாட்சியர் ராஜசேகர் புகார் வழங்கியுள்ளார். இந்த புகாரினடிப்படையில் அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரை சார்ந்த வின்சென்ட்(85), அம்பத்தூர் சோளம்மேடு பகுதியைச் சார்ந்த பினு(41) உள்ளிட்ட 2 பேரையும் போலி ஆவணங்களை தயார் செய்தபோது கையும், களவுமாக காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் […]

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல். இது குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; உயர்‌ நீதிமன்றத்தின்‌ சிறுவர்‌ நீதிக்‌ குழு மற்றும்‌ போக்சோ குழுவினர்‌ போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல்‌ வன்முறை தடுப்புச்‌ சட்டம்‌) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும்‌ அதிகாரிகளுக்கு கிழ்கண்ட அறிவுரைகள்‌ வழங்கியுள்ளனர்‌. அதன்படி […]

திருச்சி சிரஞ்சீவி நகர் ஏ ஆர் கே நகரைச் சார்ந்தவர் திரேந்தர்(42) இவர் மணிகண்டம் பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகின்றார். இந்த பகுதியில் இருக்கின்ற வேப்ப மரத்தில் உடல் முழுவதும் காயங்களுடன் கயிற்றால் கட்டப்பட்ட ஒரு இளைஞர் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மணிகண்டன் காவல்துறை ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் காவல் துறையைச் சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சார்ந்த 45 வயதான தொழிலதிபர் கமல்காந்த் ஷா, இவர் சென்ற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அந்தேரியில் இருக்கின்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அந்தேரி மருத்துவமனையில் இருந்து மும்பை மருத்துவமனைக்கு சென்ற செப்டம்பர் மாதம் 3ம் தேதி திடீரென்று மாற்றப்பட்டார். அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வந்த […]

பக்கத்து வீட்டுப் பெண் மீது கொண்ட காம இச்சையின் காரணமாக, கணவன் கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த சமயத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் கணவனை அனுப்பி அந்த பெண்ணையும், அந்தப் பெண்ணின் மகளையும் பலாத்காரம் செய்ய வைத்த மனைவியும், அவருடைய கணவரும் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பெண் பிரியா(40). இவர் தன்னுடைய கணவரை பிரிந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் தன்னுடைய மகளுடன் […]

விரைவில் ஆர்.எஸ்.பாரதி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் […]

கிட்டத்தட்ட 4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தொடர் நிறைவுக்கு வந்தது. வெள்ளித்திரையை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால், வாரத்தில் 6 நாட்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் டிஆர்பியில் முதல் 5 இடங்களை பெறுகிறது. பெரும்பாலும் சன் டிவியில் எதிர்நீச்சல், சுந்தரி, ரோஜா, கயல் போன்ற தொடர்கள் டிஆர்பியில் இடம் […]