கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு சீராக இல்லை எனவும், […]

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜுலை 18-ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இவ்வறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா […]

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) வரவிருக்கும் சுற்றுப்பயணம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வழங்கவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் தெரிவித்துள்ளார். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் இந்திய அணி, வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 17 முதல் 31 வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் மிர்பூர் மற்றும் சட்டோகிராமில் நடைபெற உள்ளன. இந்தியா வங்கதேசத்திற்கு பயணம் செய்ய […]

லாக்கப் மரணங்கள் ஆளும் கட்சியால் நடக்கிறது எனச் சொல்ல முடியாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், குடியரசுத் தலைவர் ஆட்சியே இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தான் நடக்கிறது என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் காரீப் (சொர்ணவாரி) பருவத்தில் நெல் I, 380 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் I பயிருக்கான விதைப்புக்காலம் மே முதல் ஜூன் ஆகும். ஆகையால் நெல் I (சொர்ணவாரி) பயிரிடும் விவசாயிகள் அனைவரும் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.726/- பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என மாவட்ட […]

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (28), இவர் நகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீசாரால் விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். போலீசார் கண்மூடித் தனமாக தாக்கியதால் அஜித்குமார் உயிரிழந்ததாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அஜித்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருடைய உடலில் […]

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்திட உதவ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உள்ளிட்டோர், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனு குறித்து இறந்த பெண்ணின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது; திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி […]

உலக பணக்காரரான எலான் மஸ்க் உள்ளிட்டோரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க செனட்டில் டிரம்பின் வரி மசோதா நிறைவேறியது. செனட் குடியரசுக்கட்சியினர், அதிபர் டொனால்ட் டிரம்பின் பெரிய வரிவிலக்குகள் மற்றும் செலவுக் குறைப்புத் திட்டத்தை செவ்வாய்க்கிழமை மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றினர். நேற்று இரவு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு கூட்டத்திற்கு பிறகு, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும், தங்களுடைய சொந்த குடியரசுக்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி, அவர்கள் இந்த […]

ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த மொபைல் RailOne செயலியை இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.. நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த மொபைல் RailOne செயலியை இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.. […]