வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.. இது வடமேற்கு திசையில் ஒடிசா மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை கடந்து நகரக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு […]
அமர்நாத் யாத்திரைக்கு ஒரு வாரம் முன்னதாக, இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் பற்றிய தகவலை பாதுகாப்புப் படையினர் பகிர்ந்து கொண்டனர், இந்த நடவடிக்கை தற்போது பிஹாலி பகுதியில் நடந்து வருவதாகக் கூறினர். எனவே இந்த இடத்தின் பெயரே இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த […]
போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கும் விரைவில் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-ஆலங்காயம் ஊராட்சியில் உள்ள மேக்னா மலையில் ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும். குமாரமங்கலம் பகுதியில் ரூ.6 கோடி […]
பக்கவாதத்தின் 5 முக்கியமான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.. உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று பக்கவாதம். குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் அதிகமான இளைஞர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரித்து விரைவான நடவடிக்கை எடுப்பது ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும்.. இந்த அறிகுறிகளை அறிந்து செயல்படுவது வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பக்கவாதத்தின் 5 முக்கியமான […]
தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமாரிப்புத்துறை தெரிவித்துள்ளது.. தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் தெரிவித்துள்ளார். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய போர்டல் தயாராக வருவதாகவும் அவர் தெரிவித்தார். முட்டை விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுவது போல, தினசரி அடிப்படையில் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி, கோழி இறைச்சி விலையை நிர்ணயம் செய்யவும் […]
நடிகர் கிருஷ்ணா வாட்ஸ் ஆப் உரையாடலில் Code Wordல் தகவல் பறிமாற்றம் செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் பற்றி எதுவும் இல்லாததால், கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு. சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்ற SCO (Shanghai Cooperation Organisation) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து எந்தவொரு குறிப்பும் இல்லாததை தொடர்ந்து, இந்தியா கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளது. இந்த மாநாட்டில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் […]
அதிமுக – பாஜக கூட்டணியின் போலி பக்தியையும் அரசியல் நாடகத்தையும் யாரும் இங்கு ஏற்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது “ கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிந்த நாட்டை வரலாறு காணாத வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளோம்.. ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசால் கூட நமது வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.. பாஜகவும், அதிமுகவும் மக்களை பற்றி […]
உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆவார். இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். உள்ளாட்சித் தேர்தலில் முன்விரோதம் காரணமாக முத்து பாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த […]