fbpx

ஊட்டி பகுதியின் அருகே இருக்கும் இத்தலார் கிராமத்தில் அர்ஜுணன் என்பவர் தனது மகன் அபிமன்யுடன் 26, வசித்து வருகிறார். மகன் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தின் அருகே உள்ள எமரால்டு என்ற அணைக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ஊட்டி சேர்ந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தன் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 656 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 07 ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் […]

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Cent- FLCC Counselor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 20 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க […]

நெல்லை மாவட்டத்தில் ‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெண்படல சுழற்சி எனப்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காற்றின் மூலமாகவும், மாசு மூலமாகவும் வேகமாக பரவக் கூடியது என்பதால் தற்போது பல்வேறு மாவட்டங்களில் ’மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. சென்னையில் கடந்த […]

நீங்கள் அடிக்கடி நெடுஞ்சாலையில் பயணிப்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. சமீபத்தில் சுங்கக் கட்டணம் தொடர்பான ஒரு செய்தி வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அரசாங்கத்திடமிருந்து வரி விலக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும்போது சுங்கவரி செலுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மைதானா என்று நிறையப் பேருக்கு சந்தேகம் உள்ளது. அதுகுறித்து PIB உண்மை […]

மகள் காதல் திருமணம் செய்ததால், அவரை கடத்தி மொட்டை அடித்து கொடுமைப்படுத்திய பெற்றோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் மாதவ். இவர் பக்கத்து ஊரில் வசித்து வரும் அட்சிதாவை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் திருமணத்துக்கு பிறகு இருவரும் தனி வீடு எடுத்து வசித்து […]

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் உள்ளடக்கத்தில் சுய கட்டுப்பாடு தேவை என பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒரு பக்கம் நாம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப மதிப்புகள் தொடர்பாக பேசி வருகிறோம், மறுபக்கம் தொலைக்காட்சி மற்றும் ஒடிடி தளங்களில் நாம் பார்க்கும் விஷயங்கள் இந்திய கலாச்சார பரப்புக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன என்றார். பொழுதுபோக்குக்கு […]

மக்கள் வெளியே பயணத்தை மேற்கொள்ளும் போது பொது-கழிவறையை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனா‌ல் சிறுநீர் தொற்று ஏற்படக்கூடும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சில வழிகள் இங்கே காணலாம். சில சமயங்களில் பொதுக் கழிவறைகளில் தண்ணீர் கூட இல்லாமல் இருக்கும். மேலும் சில மாதங்களில் சுத்தமும் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. டிஷ்யூ பேப்பரை எடுத்து கொண்டு, உங்கள் விரலை முழுமையாக […]

விருதுநகரில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், குற்றவாளியின் வாக்குமூலம் போலீசாரையே அதிரவைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சங்கரலிங்கம் (42). இவர் பட்டம்புதூரில் டிவி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சங்கரலிங்கம் பட்டம் புதூரில் இருந்து R.R. நகரில் உள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்று விட்டு திரும்பி தன்னுடைய இருச்சக்கர வாகனத்தில் பட்டம்புதூர் நோக்கி […]

தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டு தோறும் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தி வருகிறது. அந்த வகையில், 2022-2023ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவிகள் இதில் கலந்து கொண்டு பலனடையலாம். பயிற்சி வகுப்புகள்: சென்னை இராணி மேரி கல்லூரி, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி […]