fbpx

நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சமீபத்தில் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது பல திட்டங்கள் விலை குறைவாக உள்ளன. ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள், ஏர்டெல் 4ஜி டேட்டா ரீசார்ஜ், பிரபலமான திட்டங்கள், உண்மையிலேயே அன்லிமிடெட் பிளான்கள் போன்ற பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை குறித்து பார்க்கலாம்.. இந்த ப்ரீபெய்ட் ரூ. 399 […]

மிகப்பெரிய வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு அஜித்தின் ’துணிவு’ திரைப்படம் தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளன. நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித்குமார் 3-வது முறையாக இணையும் படம் ’துணிவு’. இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

சீனாவில் நிதி பிரிவு தொடர்புடைய ஊழல்களை ஒழிக்கும் தீர்மானத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையில், பல உயர்மட்ட அதிகாரிகள் சிக்குகின்றனர். இதன்படி, நிதி சார்ந்த அரசு துறையின் பல மூத்த அதிகாரிகள் விசாரணையின் அடிப்படையில் கண்டறியப்பட்டு, கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளனர் உள்ளனர். சீனாவின் முன்னாள் நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியாக பதவி வகித்தவர் ஃபூ ஜெங்குவா. அவர் தனது பதவி காலத்தில் அதிகார […]

காசியாபாத்தில்  வேகமாக வந்த கார் மாணவர்களை இடித்து தூக்கி வீசும் பயங்கரமான காட்சிகள் வைரலாகி வருகின்றது .. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மாணவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது சாலையில் எதிரே கார் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்து சில மாணவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர். சில மாணவர்கள் அந்த இடத்திலேயே நின்று கொண்டு கார் வருவதை கவனிக்காமல் சண்டையிட்டுக் கொண்டே […]

முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதியை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவை. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோர் தபால் முறையில் வாக்கு செலுத்தும் தபால் ஓட்டு போடும் நடைமுறை உள்ளது. தேர்தல் பணிக்காக அவர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி வகுப்பு நடைபெறும் போது தபால் ஓட்டுக்கான […]

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஜூ பென் வி. இவர் அந்த பகுதியில் பிரபல டாக்டராக உள்ளார். இந்த நிலையில் இவர் மீது கடந்த 2020-ஆம் வருடம் ஒரு பெண் தனது அந்தரங்க வீடியோக்களை அவர் வைத்திருப்பதாக புகார் கொடுத்தார். எனவே அதிகாரிகள் அவரை விசாரித்தனர். அப்போது அவரது ஷூவில் இரகசிய கேமரா ஒன்றை பொருத்தி, ஹாஸ்பிடல், மால்கள், கல்லூரிகள், ரெயில் நிலையம் என பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு சென்று […]

ஹீரோ விடா (Hero Vida) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபர் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதி ஜூலை 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஸ்கூட்டர் அடுத்த மாதம் 7-ம் தேதி அறிமுகமாக உள்ளது.. இது ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் […]

டெல்லியில் ரூ.200 கேட்டு தரவில்லை என்பதற்காக அந்த நபரை இரண்டு சிறுவர்கள் சேர்ந்துதாக்குதல் நடத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் படேல் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருண்பஞ்சால் என்பவர் பூங்கா அருகே நின்று கொண்டிருந்திருக்கின்றார். அங்கு வந்த 3 சிறுவர்கள் அவர்களிடம் ரூ.200 கேட்டுள்ளனர். அதுவும் சூதாடுவதற்காக 200 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சிறுவர்கள் ஆத்திரமடைந்தனர். […]

நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது. அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 மற்றும் ஜூலை 11 ஆம்தேதி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என்ற […]

சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காலை தலைமைச் […]