சென்னையில் இன்றைய (ஜூன் 12, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்திய மக்களின் சேமிப்பில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் தான், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஆட்டம் காட்டி வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் […]

எந்தவொரு நாட்டின் வளர்ச்சியும் அதன் பணக்காரர்களைப் பார்த்து தீர்மானிக்கப்படுகிறது. உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது அது உலகின் நான்காவது நாடாக மாறியுள்ளது, அங்கு அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள், அதாவது பணக்கார செல்வந்தர்கள் அதிகம் வசிக்கின்றனர். நைட் ஃபிராங்க் குளோபல் வெல்த் ரிப்போர்ட் 2025 இன் படி, இந்தியாவில் 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 85,698 […]

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில், 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. 2023 ஜனவரியில், அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு […]

UPI முறையை இப்போது சுமார் 46 கோடி மக்களும் 6.5 கோடி வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். மிகச்சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட டிஜிட்டல் பணம் செலுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நம்மில் பலரும் இப்போது கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தனை காலம் இந்த செயலிகளில் அனைத்து சேவைகளையும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்த சூழலில், அது இப்போது மெல்ல மாற தொடங்கியுள்ளது. கூகுள் […]

தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு சந்தையில் இன்றைய தினம் காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பெய்து வந்த கோடை மழையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் விளைச்சல் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த வாரங்களில் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஏனென்றால் இன்னும் விலை அதிகரிக்குமோ என்ற அச்சம் […]

மத்திய பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடங்களுக்கான 13-வது கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய பணியாளர் தேர்வாணையம் “காலி பணியிடங்கள் 2025”-க்கான 13-வது கட்ட தேர்வு குறித்த அறிவிப்பை 02.06.2025-ம் தேதி வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள மத்திய அரசின் அமைச்சகங்கள்,துறைகள், அமைப்புகளால் அறிவிக்கப்படும் பல்வேறு காலி பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை வெளிப்படையான முறையில் ஆணையம் நடத்துகிறது. பதவி, வயது […]