”ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது” தவறு என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் முக.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறார். அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு திமுகவுக்கு அருகதை இல்லை. திட்டங்களுக்கான பெயர் சூட்டு விழா மட்டுமே பிரமாண்டமாக நடக்கிறது. […]
வண்ணாரப்போட்டை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி 22 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர் ஷகிதா பானு , உடந்தையாக இருந்த […]
ஆந்திரப் பிரதேசத்தில் புல்டோசர் மூலம் 2.43 லட்சம் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் சோதனை சாவடிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை செய்து வருகின்றனர். அப்போது தெலுங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டில்களை காவல்துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர். இந்த மதுபானங்களின் […]
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் மைக்கேல் ஜார்ஜ் பிரபு (39). இவருடைய மனைவி மேரி அஸ்வதி (33). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் மேரி அஸ்வதி நாகர்கோவில் ராம அச்சன்புதூரில் இருக்கும் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் மைக்கேல் […]
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]
திண்டுக்கல் பாரதிபுரத்தில் வசித்து வரும் 47 வயது சமையல் தொழிலாளிக்கு மனைவி இறந்துவிட்டார். அதன்பின்னர் அவரது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். மனைவி இறந்துவிட்டதால் மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் வேலைக்கு செல்லும்போது அந்த பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி கண்ணன் என்பவரது வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். கண்ணனுக்கு கல்யாணமாகி அவரது மனைவி இறந்துவிட்டார். மேலும் அவரது மகளும் மூளைவளர்ச்சி குறைபாடால் இறந்துவிட்டார். இந்நிலையில் […]
சவுக்கு சங்கரின் நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முடிவுற்று இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு கொடுக்கப்பட உள்ளது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.. இதுதவிர சவுக்கு என்ற தனது யூ டியூப் சேனலிலும் பேசி வருகிறார்.. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார்.. இதுதொடர்பாக சென்னை […]
தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக் காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. மேலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தேர்வுக்கான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டது. மாநில அளவில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் பல இடங்களில் இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள் […]
தமிழகத்தில் H1N1 வைரஸ் காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது புதுவகை காய்ச்சல் பரவி வருகிறது. எனவே ஒவ்வொரு பருவமழைக்கு பின்னரும் பரவும் காய்ச்சல் பற்றிய ஆய்வை மேற்கொண்டேன். தற்போது பரவும் காய்ச்சலின் உண்மை நிலையை அறிவிக்க […]
“நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்குவதே இலக்கு” என காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதன்படி, இன்று […]